தேமுதிகவின் உட்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது: மு.க.ஸ்டாலின்

Share this :
No comments

தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் உடபட பல நிர்வாகிகளை விஜயகாந்த் நீக்கியுள்ளது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்தது பற்றி தேமுதிக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இன்று மதியம் தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் உட்பட மூன்று எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். மேலும், பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்கள், நாளை மதியத்திற்கும் எங்களை விஜயகாந்த் அழைத்துப் பேச வேண்டும் என்று கெடு விதித்தனார். இதனால் அதிர்ச்சியடைந்த தேமுதிக தலைமை கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, சந்திரகுமார் உட்பட சில நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியது. இதுபற்றி சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின் “தேமுதிக அதிருப்தியாளர்களை நீக்கியது, அவர்களின் உட்கட்சி விவகாரம். அதில், நானோ அல்லது திமுகவோ தலையிட விரும்பவில்லை. மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, திமுக மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதுபற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. இன்னும் மூன்று நாட்களுக்குள் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படும். அதேபோல் திமுக போட்டியிடும் தொகுதிகளை தலைவர் கருணாநிதி அறிவிப்பார்”என்று கூறினார்.

No comments :

Post a Comment