நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 98 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் மூலம் அதிக பெரும்பாண்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது அதிமுக.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 33 தொகுதிகளில் தோல்வியை தழுவியது திமுக கூட்டணியின் தோல்விக்கு ஒரு முக்கிய பங்காக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்ததால் தான் திமுக தோல்வியடைந்து விட்டதாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் கோபமடைந்து உங்களது நையாண்டித் தனமான, குருட்டுத் தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என கூறினார்.

திமுகவின் தோல்விக்கு காரணம் காங்கிரஸா?: ஸ்டாலின் கோபம்



சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் திமுக பெற்றுள்ள வாக்குகளின் வித்தியாசம் வெறும் 1.1 சதவீதம் மட்டுமே என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு, வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகச் சட்டப் பேரவைக்கான 15வது பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்து 232 தொகுதிகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப் பட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 232 தொகுதிகளிலும் தி.மு. கழகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு 1 கோடியே 71 இலட்சத்து 75 ஆயிரத்து 374 வாக்குகள் அதாவது 39.7 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

அ.தி.மு.க. அணிக்கு 1 கோடியே 76 இலட்சத்து 17 ஆயிரத்து அறுபது வாக்குகள் அதாவது 40.8 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அணிக்கும், தி.மு.கழக அணிக்கும் உள்ள வாக்குகள் வித்தியாசம் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 686 வாக்குகள் தான்; அதாவது 1.1 சதவிகிதம் வாக்குகள் தான் இரண்டு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.

எப்படி என்றாலும் அவர்கள் ஆளும்கட்சி. நாம் எதிர்க் கட்சி. எதிர்க் கட்சி என்றால், தமிழகச் சட்டப் பேரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 89 உறுப்பினர்களைக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் தான் பிரதான எதிர்க்கட்சி.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு, வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே, திருவாரூர் தொகுதியில் கழக வேட்பாளராக இரண்டாவது முறையாக அந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில் போட்டியிட்ட நிலையில், 1 இலட்சத்து 21 ஆயிரத்து 473 வாக்குகளை அளித்து, தமிழ்நாட்டிலே மிக அதிக வித்தியாசமான 68 ஆயிரத்து 366 வாக்குகள் கூடுதலாக அளித்து வெற்றி பெறச் செய்த திருவாரூர் தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைக் குவிக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்

திமுக-அதிமுகவிற்கு இடையே 1.1 சதவீத வாக்குகள் மட்டுமே வித்தியாசம் : கருணாநிதி


Minister Sri KT Rama Rao speaking at the launch of Apple Development Centre
Minister Sri KT Rama Rao speaking at the launch of Apple Development Centre. Chief Minister Sri K. Chandrashekar Rao and Apple CEO Mr. Tim Cook are also seen.
The new Apple Indian office in Hyderabad facility, located on the Waverock SEZ campus, will house 4,000 developers who will work on Apple’s Maps development
4000 Indians is also equivalent to about 3 Silicon Valley salaries.Breakdown MIGHT go like this:
10 executive team interfacing with International Operations in Cupertino
40 development / build engineers interfacing with the designers in Cupertino
100 facilities (maintenance, security, cafeteria, etc.)
150 personnel management (reception, secretary, group activities)
200 IT
500 map QA managers
3000 map QA and refinement
Well "Maps" is probably an Apple definition for "Customer Call Center".Wonder how long it'll be till Apple moves it's customer service to Hyderabad .Tim's up for anything that'll save a few bucks.Basically Cook says "We will be hiring thousands of pea"NuTs" to manually enter stuff into the database which cannot possibly scan or automate in any other way in the US. I've never opened up the Apple's Maps intentionally N don't think this move is any related to maps at all.
I think what Tim Cook meant was we hire Indians in mass, not because they're good, but because they are cheap.Only $25 million? That is like $25 to TiMmy .In other words, Apple needs a much cheaper way to get Maps up to par..Well done Tim and co - Hire thousands of indian's and give them iphones, then apple's market share goes up there. Brilliant!

Minister Sri KT Rama Rao speaking at the launch of Apple Development Centre


Kingmaker Vaiko Master Plan – Tamilnadu Election 2016 Result

Kingmaker Vaiko Master Plan – Tamilnadu Election 2016 Result


சுயேட்சியாய் போட்டியிட்ட பாட்ஷா நடிகர் | Baashha Actor Contested As Independent Candidate



நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை நமீதா, அக்கட்சியின் வெற்றிக்கான காரணங்களை பட்டியலிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் சமீபத்தில் இணைந்த நமீதா, அதிமுகவின் வெற்றி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், " புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது.

மேலும், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை போட்டிகளையும் தாண்டி தனிப்பெரும் வெற்றியை அம்மாவுக்கு மக்கள் பரிசளித்திருக்கிறார்கள். இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது. வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார்.

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள்.

இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மாவை மீண்டும் அரியணையில் அமர வைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக தொண்டர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!." எனக் கூறியுள்ளார்.

அதிமுகவின் வெற்றிக்கு நமீதாவின் 'நச்' பாயின்ட்!



தமிழக சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது தி.மு.க. ஆனால், ' 16 தொகுதிகளில் தி.மு.கவின் வெற்றிவாய்ப்பை பறித்திருக்கிறது நோட்டா வாக்குகள்' என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

சட்டசபை தேர்தலில் 'மாற்று' என்ற கோஷத்தை முன்வைத்து மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. ஆனால் தேர்தல் முடிவு, மாற்று கோஷத்திற்கு மிகப் பெரிய அடியைக் கொடுத்துவிட்டது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்ற கோஷமும் எடுபடவில்லை. அதே நேரத்தில், வெற்றிக் கோட்டைத் தொடுவதில் தி.மு.க கோட்டைவிட்டு விட்டது. பதினாறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில், நோட்டா வாக்குகள் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பை பறித்துள்ளன.

ஆவடி தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 4,994. தி.மு.க தோற்றுப் போனதோ 1,395 வாக்குகள் வித்தியாசத்தில். பர்கூரில் 982 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது தி.மு.க. இங்கு நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 1,382. சிதம்பரத்தில் நோட்டாவுக்கு 1,724 வாக்குகள் கிடைத்தது. தி.மு.கவோ 1,506 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைப் பறிகொடுத்தது. கரூரில் 3,595 வாக்குகள் நோட்டாவுக்கு, தி.மு.கவோ 3,154 ஓட்டில் தோற்றது. கிணத்துக்கடவு தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்தவை 3,884, தி.மு.கவுக்கு தோல்வியோ 1,332 வாக்குகள் வித்தியாசத்தில்.

கோவில்பட்டியில் 2,350 வாக்குகள் நோட்டா கணக்கில் வந்தன. இதே தொகுதியில் 428 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க தோற்றது. மொடக்குறிச்சி தொகுதியில் நோட்டாவுக்கு 2,715 வாக்குகள் விழுந்தன. தி.மு.க இதே தொகுதியில் 2,222 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. இதேபோல் ஓட்டப்பிடாரம், பெரம்பூர், பேராவூரணி, ராதாபுரம், தென்காசி, திருப்போரூர், தியாகராய நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் நோட்டாவுக்கு, தி.மு.கவின் தோல்வி வித்தியாசத்தைவிட அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன.

ஏறக்குறைய 16 தொகுதிகளில் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு இப்படி நோட்டாவால் பறிபோயுள்ளது. கடந்த தேர்தலில் தி.மு.கவின் வாக்குகளை தே.மு.தி.க பிரித்ததால், தி.மு.க தோற்றது. இந்தமுறை மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க, பா.ம.க எனப் பல கட்சிகள் சிதறிப் போட்டியிட்டாலும், தி.மு.கவின் வாக்குவங்கி எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளது. 'எந்தக் கட்சி யாருடைய வாக்குகளைப் பிரிக்கும்? என்றுதான் தலைவர்கள் கணக்குப் போட்டார்களே தவிர, நோட்டாவை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் இந்த தேர்தல் முடிவுகள், பிரதான கட்சிகளை 'நோட்டா' வை நோக்கி பார்க்க வைத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் கட்சியினர்.

அரசியல்வாதிகள் மீதும் அரசியல் மீதும் அதிருப்தியில் இருக்கும் வாக்காளர்களால், மக்கள் நலக் கூட்டணி, சீமான் என களத்தில் வலம் வந்த கட்சிகளை விடவும் நோட்டா எடுத்த 1.3 சதவீத வாக்குகள் மிக முக்கியமானவை மட்டுமல்ல, அரசியல் அரங்கையும் அலற வைத்துவிட்டன.

தி.மு.கவை வீழ்த்திய நோட்டா! -பதற வைத்த 16 தொகுதிகள்



Tamil Nadu Election 2016 Result Special | The Beep Show | RJ Vignesh | Smile Settai


Hello tamilnadu election result 2016

Hello tamilnadu election result 2016



நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.

உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், திமுக வேட்பாளர் ஜி.ஆர். வசந்தவேல் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2,466 வாக்குகள் வித்தியாசத்தில் 3 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதனால் தேமுதிக தொண்டர்களும், மக்கள்நலக்கூட்டணி தலைவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை நிலவரம் : மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட விஜயகாந்த்



நடைபெற்று முடிந்த சட்ட தேர்தல் குறித்து, திமுக தலைவர் கருணாநிதி கருத்து ஏதும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

தமிழகத்தில் எந்த ஒரு முக்கிய அரசியல் மற்றும் முக்கிய நிகழ்வுகள், சமூகம் சார்ந்த செயல்கள் நடைபெற்றால் அதற்கு உடனே தனது கருத்தை தைரியமாக வெளியிடுபவர் திமுக தலைவர் கருணாநிதி. மேலும், தனது கருத்தை வலுப்படுத்தும்விதமாக அதை அப்படியே தனது ஃபேஸ்புக்கில் வெளியிடுவார்.

ஆனால், சட்ட தேர்தல் மன்றத் தேர்தல் 2016 முடிவுகள் இன்று காலை முதலே வெளியாகி வருகிறது. ஆனால், தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக வெளியாகி வருகிறது. ஆனால், திமுக வலுவான எதிர்க்கட்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், தனது கருத்தை திமுக தலைவர் கருணாநிதி அறிக்கையாகவும் சரி. தனது ஃபேஸ்புக்கிலும் சரி வெளியிடவில்லை. மிகவும் மவுனம் காத்து வருகிறார். மவுனத்திற்கான காரணம் தெரியவில்லை.

கருத்து சொல்லாத கருணாநிதி



தேர்தலில் வென்ற-தோற்ற சினிமா பிரபலங்கள்



TN election results: Details of vote percentage of political parties


JAYALALITHAA breaks the 32 YEARS long RECORD




"Election Promises will be fulfilled" - Jayalalithaa's first speech after Victory



TN Election Results 2016 : AIADMK Cadres break into celebrations

AIADMK Celebrates Amma's Victory In TN Elections 2016

As TN Election Results are out and AIADMK in a leading position, the followers of Jayalalitha celebrate the victory of Amma in Tamil Nadu. 

After MGR, Jayalalitha will be the first person crowned as Three Time Chief Minister In Tamil Nadu.

AIADMK Celebrates Amma's Victory In TN Elections 2016


சென்னை: 1984ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக 2வது முறையாக அதிமுக அரியணை ஏறுகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு கட்சி 1984க்கு பிறகு தொடர்ச்சியாக அரியணை ஏறுவது இதுதான் முதல்முறை.

1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான, அதிமுக 144 தொகுதிகளிலும், கருணாநிதி தலைமையிலான திமுக 48 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து சென்று அதிமுகவை தொடங்கிய இந்த, முதல் தேர்தலிலேயே அக்கட்சி வெற்றிவாகை சூடியது.

இரு கட்சிகளுக்கும் முறையே, 33.52 மற்றும் 24,89 சதவீத வாக்குகள் கிடைத்தன. எம்ஜிஆர் அருப்புக்கோட்டை தொகுதியிலும், கருணாநிதி அண்ணாநகர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். 1980ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக 162 தொகுதிகளிலும், கருணாநிதி தலைமையிலான திமுக 69 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் 48.92 சதவீதம், அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் 44.43 சதவீதம். மதுரை மேற்கு தொகுதியில் எம்ஜிஆரும், அண்ணா நகர் தொகுதியில் கருணாநிதியும் வெற்றி பெற்றனர். 1984ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுகவும், கருணாநிதி தலைமையில் திமுகவும் மோதின.

இதில் அதிமுக 195 தொகுதிகளை வென்று அசத்தியது. திமுக 34 தொகுதிகளை மட்டுமே வென்றது. கருணாநிதி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எம்.ஜி.ஆர், ஆண்டிப்பட்டியில் அமோக வெற்றி பெற்றார். அதிமுகவுக்கு வந்த வாக்கு சதவீதம், 53.87 சதவீதமாகும். திமுகவுக்கு 37 சதவீத வாக்குகள் கிடைத்தன.

முந்தைய தேர்தலைவிட வாக்கு சதவீதம் அதிமுகவுக்கு உயரவே செய்தது. ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் இல்லை என்பதை அது காண்பித்தது. இப்படி ஹாட்ரிக் வெற்றியை சுவைத்த அதிமுக, எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 1989ல் நடந்த தேர்தலில் பிளவுபட்டு ஜெ அணி, ஜா அணி என பிரிந்து மோதியது. இதில் திமுக எளிதில் வென்று, கருணாநிதி முதல்வரானார்.

ஆனால் ஆட்சி கலைப்புக்கு பிறகு, 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரான இந்த தேர்தலில் அதிமுக 224 தொகுதிகளை வென்று அசத்தியது. திமுக வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

ஜெயலலிதா பர்கூர் தொகுதியிலும், கருணாநிதி துறைமுகம் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதால் மக்கள் திமுக மீது இந்த அளவுக்கு வெறுப்பை காட்டினர். இதன்பிறகு 1996ல் திமுக 221 தொகுதிகளில் வென்று பழி தீர்த்தது. அதிமுகவுக்கு 8 இடங்கள்தான் கிடைத்தன.

பர்கூரில் ஜெயலலிதா தோற்றார். சேப்பாக்கத்தில் கருணாநிதி வென்றார். சொத்துக்குவிப்பு, ஆடம்பர திருமணம் போன்றவை ஜெயலலிதாவுக்கு வரலாறு காணாத அடியை பெற்றுக்கொடுத்தது.

இதன்பிறகு, 2001 சட்டசபை தேர்தலில் அதிமுக 196 இடங்களிலும், திமுக 37 தொகுதிகளிலும் வென்றது. 2006 சட்டசபை தேர்தலில் திமுக 163 தொகுதிகளிலும், அதிமுக 69 தொகுதிகளிலும் வென்றது. 2011ல் நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 31 தொகுதிகளில் மட்டும் வென்றது.

இப்போது மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்துள்ளது. 1984ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக 2வது முறையாக அதிமுக அரியணை ஏறுகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு கட்சி 1984க்கு பிறகு தொடர்ச்சியாக அரியணை ஏறுவது இதுதான் முதல்முறை.


32 வருடங்களுக்கு பிறகு.. தொடர்ந்து 2வது முறை ஆட்சியை பிடித்து அதிமுக சாதனை


சென்னை: நெஞ்சத்தின் அடித்தளத்தில் இருந்து எழும் நன்றி உணர்வை வெளிப்படுத்த தமிழ் அகராதியில் வார்த்தை இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

அதிமுக வெற்றிமுகத்தில் இருக்கும் தகவல் வெளியானதும், முதல்வர் ஜெயலலிதாவை, அரசு உயர் அதிகாரிகள் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும், காலில் விழுந்தும், வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, இதன்பிறகு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது, நெஞ்சத்தின் அடித்தளத்தில் இருந்து எழும் நன்றி உணர்வை வெளிப்படுத்த தமிழ் அகராதியில் வார்த்தை இல்லை.

1984ம் ஆண்டுக்குப் பிறகு ஆளும் கட்சி தேர்தலில் மீண்டும் வெல்வது என்பது இப்போதுதான் நிகழ்ந்துள்ளது. 10 கட்சிகள் எதிர்த்தபோதும் நான் ஆண்டவனை நம்பி மக்களுடன் கூட்டணி வைத்தேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள்.

மகேசன் என்றால் மக்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். தமிழக மக்கள் என்னை கைவிடவில்லை, என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களால் நான்... மக்களுக்காகவே நான் என்பதே பிரசாரத்தில் தாரக மந்திரம். எனக்கென்று வேறு தனிப்பட்ட வாழ்க்கை கிடையாது.

எனது வாழ்வு தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது மக்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.

மக்கள் தொண்டில் எனது வாழ்வை கழிப்பேன். தமிழக மக்களுக்கு என்னென்றும் நன்றி கடன்பட்டுள்ளேன். வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.




தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல அகராதியில் வார்த்தைகளே இல்லை.. ஜெ. உருக்கமான பேட்டி


0சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சுமார் 220 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகிறது.

10.30 மணி நேர நிலவரப்படி அதிமுக 139 தொகுதிகளிலும், திமுக 79 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

தேமுதிக மக்கள் நல கூட்டணி, வேட்பாளர்கள் 3 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் 2 இடங்களிலும் உள்ளனர்.

தேனி , திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

நெல்லை, மதுரை, கடலூர் மாவட்டங்களின் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக வேட்பாளார்களின் கையே ஓங்கி இருக்கிறது.

இதனிடையே, கன்னியாகுமரின் அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. அதேபோல் சென்னையில் திமுக 4 இடங்களிலும் அதிமுக ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன. விழுப்பரம் மாவட்டத்தில் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

காஞ்சிபுரத்தில் அதிமுக 4 இடத்திலும், திமுக ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

அ.தி.மு.க., வேட்பாளர்கள் 139 தொகுதிகளில் முன்னிலை: சென்னையில் தி.மு.க., முன்னிலை