மற்றவர்களின் சொத்துகளுக்கு ஜெயலலிதா ஏன் விளக்கம் தர வேண்டும் : ஜெ.வக்கீல் வாதம்

மற்றவர்கள் சேர்த்த சொத்துகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் தர தேவையில்லை என்று ஜெ.வின் வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். சொத்துகுவிப்பு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்பை, எதிர்த்து, கர்நாடக அரசு மேல் முறையீடு செய்த வழக்கு, உச்சநீதி மன்றத்தில் தற்போது நடந்து வருகிறது. தற்போது ஜெயலலிதா தரப்பு வாதங்களை அவரின் வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் எடுத்துரைத்து வாதாடி வருகிறார். இந்த வழக்கு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. நாகேஸ்வரராவ் வாதாடும் போது “தமிழக முதல்வர் மீது அரசியல் ஆதாயத்திற்காகத்தான் இந்த வழக்கே போடப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கே முன்னரே, வருமான வரி கணக்குகள் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு விட்டது. நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் வருமான வரி கணக்கு மட்டும்தான் தாக்கல் செய்யப்படவில்லை. ஜெயலலிதா முறையற்ற வகையில் சொத்து சேர்க்கவில்லை என வருமான வரி தீர்ப்பாயமே கூறிவிட்டது. ஆனால் இதை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்காகும். மேலும், சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் ஜெயலலிதா விட்டில் ஒன்றாக வசிக்கிறார்கள் என்பதற்காக, அவர்களுக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே பணப்பறிமாற்றம் நடைபெற்றது என்று கூற முடியாது. ஜெயலலிதாவின் சொத்துகள் மிகையாக மதிப்பிடப்பட்டுள்ளன. அவரது சொத்துகளுக்கு முறையான வருமான வரி கட்டப்பட்டுள்ளது. மற்றவர்கள் சேர்த்த சொத்துகளுக்கு ஜெயலலிதா ஏன் விளக்கம் தர வேண்டும்?” என்று அவர் தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment