கட்சியிலிருந்து விலகலா? : தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் பேட்டி
தேமுதிகவிலிருந்து விலகுவது குறித்து தேமுதிக கொள்கை பரப்பு செயலாலர் சந்திரகுமார் கருத்து கூறியுள்ளார். மக்கள் நலக் கூட்டணியினருடன் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரக்குமார் தலைமையில், கும்மிடிபூண்டி சி.எச்.சேகர், தேமுதிக துணை செயலாளர் தேனி முருகேசன், மேட்டூர் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்களும், 10 மாவட்டச் செயலாளர்களும் போர்க்கொடியை தூக்கியுள்ளனர். அதுபற்றி கூறுவதற்காக சந்திரக்குமார் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நிர்வாகிகளின் விருப்பத்திற்கு மாறாக விஜயகாந்த் முடிவெடுத்துள்ளதாகவும், நாளை மதியத்திற்குள் அவர்களை அழைத்துப் பேசி, திமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து அறிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தேமுதிகவிலிருந்து விலகும் எண்ணம் இல்லை என்றும், திமுகவுடன் கூட்டணி வைப்பதே எங்கள் விருப்பம் என்றும் அவர் கூறினார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment