ஒவ்வொருத்தருக்கும் 3 கோடி கொடுத்த திமுக: வைகோ ஆவேசம்

Share this :
No comments

தமிழக அரசியலில் இன்று அதிரடி திருப்பமாக தேமுதிக கொள்கை பரப்பு செயலாளரும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சந்திரகுமார் தலைமையில் 5 எம்எல்ஏ-க்கள் உட்பட 10 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் திமுக உடன் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும் என விஜயகாந்திற்கு நாளை மதியம் வரை கெடு விதித்தனர். இது தமிழக அரசியலில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு ஓய்வதற்குள் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். போர்க்கொடி தூக்கிய அத்தனை பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவை கடுமையாக சாடினார். இந்த நிகழ்வுக்கு பின்னர் திமுக இருப்பதாக கூறினார். நான் கேள்விபடுகிறேன் ஒவ்வொருத்தருக்கும் திமுகவில் 3 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக செய்திகள் உலாவருகின்றது என்றார் வைகோ. மேலும் பணம் கொடுத்து ஆட்களை இழுப்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினார்.

No comments :

Post a Comment