தேமுதிகவின் இந்த நிலை நான் எதிர்பார்த்தது தான்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக சந்திரகுமார் உட்பட 10 மாவட்ட செயலாளர்கள் தேமுதிகவில் விஜயகாந்த் எடுத்த கூட்டணி முடிவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிகவின் இந்த நிலை நான் முன்னதாகவே எதிர்பார்த்தது தான் என்றார். மேலும் தேமுதிகவின் இந்த நிலைமைக்கு நாங்கள் வருத்தப்படுகிறோம். நீண்ட நாட்களாக எங்களுடன் பயணித்தவர் என்ற முறையில் அவர்களின் இந்த நிலைக்கு நாங்கள் வருத்தப்படுகிறோம் என்றார். 2014 தேர்தலில் தேமுதிக பாஜக கூட்டணியில் இருந்து 19 சதவீத வாக்குகள் பெற்றது. இந்த தேர்தலில் தேமுதிக பாஜக கூட்டணியில் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் மக்கள் நல கூட்டணியில் சேர்ந்த போது வேதனை அடைந்தோம். இன்று நடந்த நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது, பழம் நழுவி பாழாய் போய்விட்டது என்றார் பொன்.ராதாகிருஷ்ணன். மேலும் தேமுதிகவின் நிர்வாகிகள் இப்படி போர்கொடி தூக்கி இருப்பது தமிழக மக்களுக்கு நன்மை அளிக்க கூடியது அல்ல என்றார். இந்நிலையில் போர்கொடி தூக்கிய அத்தனை பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி விஜயகாந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment