ஏன் விஜயகாந்திற்கு எதிராக போர்க்கொடி? - கொ.ப.செ. சந்திரகுமார் விளக்கம்

Share this :
No comments

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் அணி சேர்ந்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரக்குமார் தலைமையில், கும்மிடிபூண்டி சி.எச்.சேகர், தேமுதிக துணை செயலாளர் தேனி முருகேசன், மேட்டூர் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்களும், 10 மாவட்டச் செயலாளர்களும் மக்கள் நலக் கூட்டணி உடனான கூட்டணியை பரிசீலனை செய்ய வலியுறுத்தி இந்த போர்க்கொடியை தூக்கியுள்ளனர். இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரக்குமார், “என் மீது கிட்டத்தட்ட 6 வழக்குகள், பார்த்திபன் மீது 11 வழக்குகள் போடப்பட்டது. நானும், சேகர் போன்றோரும் சட்டமன்றத்தில் இருந்து ஓராண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டோம். இங்கே இருக்கின்ற அத்தனை நிர்வாகிகளும், ஏதாவது ஒரு வகையிலே அதிமுக அரசால் கடுமையாக பாதிக்கப்பட்டோம். இதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால், ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் எல்லாரும் இந்தளவு பாதிக்கப்பட்டோம். ஒவ்வொரு கிராமத்தில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லாம் நிறைய பாதிப்படைந்தோம். தமிழகத்தில் மோசமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாதாரணமான ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென்றால்கூட நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை. இத்தகைய நிலைமையில் எங்கள் தலைவர் கேப்டன் அவர்கள், இந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ஆட்சிக்கட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்று உறுதியளித்திருந்தார். நாங்கள் எங்களது சொந்த காசில் செலவு செய்திருக்கிறோம். கட்சியில் இருந்து எல்லாம் பணம் அளிக்கவில்லை. ஏன் இதனையெல்லாம் செய்தோம் என்றால், கேப்டன் மீது உள்ள பற்று, விசுவாசம் மற்றும் அவர் மீது வைத்திருக்கும் வெறியால்தான். விஜயகாந்திற்காக உண்மை விசுவாசியாக கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தோம். திமுகவுடன்தான் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும் என 95 சதவீதம் தேமுதிகவினர் கருத்து தெரிவித்தனர். தற்போது மக்கள்நலக் கூட்டணியில் இணைந்துள்ளதன் மூலம் ஜெயலலிதாவுக்கு ஆதரவான முடிவை விஜயகாந்த் எடுத்துவிட்டதாக தெரிகிறது மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். திமுகவுடன் கூட்டணி அமைத்துபோட்டியிட்டு வெற்றி பெறுவோம். எனவே கேப்டன் அவர்கள் தங்கள் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்றுதான் கோரிக்கை வைக்கிறோம். தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரக்கூடாது என்றால் நாம் திமுக. கூட்டணியில் பங்கேற்க வேண்டும். அப்போதுதான் ஆட்சியை மாற்ற முடியும் என கேட்கிறோம். நாங்கள் தேமுதிகவை விட்டு விலகவில்லை. ஆனால், நாளை மதியத்திற்குள் அவர் தனது முடிவை மாற்றி அறிவிப்பார் என்றும், அவர் எங்களை அழைத்து பேசுவார் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment