தேமுதிகவில் போர்கொடி உயர்த்திய சந்திரகுமார் உட்பட அனைவரும் நீக்கம்: விஜயகாந்த் அதிரடி
சற்று முன்பு தேமுதிக கொள்கைபரப்பு செயாலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சந்திரகுமார் உட்பட 10 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்திற்கு எதிராக போர்கொடி உயர்த்தினர். திமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என அவர்கள் நாளை வரை விஜயகாந்திற்கு கெடு விதித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேமுதிகவில் போர்கொடி தூக்கிய சந்திர குமார் உட்பட அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக விஜயகாந்த் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். 3 எம்எல்ஏ உட்பட எதிர்ப்பு தெரிவித்த கட்சி தொண்டர்கள் அனைவரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொண்டர்கள் யாரும் அவர்களுடன் தொடர்புகொள்ள கூடாது என விஜயகாந்த் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இது திமுகவின் சூழ்ச்சி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment