ஏப்ரல் 25: ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்கிறார்

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப் பேரவைக்கு மே மாதம் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22 ஆம தேதி முதல் தொடங்குகிறது. மனு தாக்கல் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை காலை தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினமே தமிழகத்தில் மற்ற 233 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அதிமுக தலைமை குறிப்பிடம் நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது. மேலும், 25 ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் சுப முகூர்த்த தினங்களாகும். எனவே, இந்த இரு நாட்களில், ஒரு தினத்தில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆன்மீகத்திலும், ஜோதிடத்திலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். தற்போது ஜெயலலிதா ராசிக்கு 2 ஆம் தேதி 4 ஆம் தேதி, 7 ஆம் தேதி ஆகியவை ராசியாக கருதப்படுவதால், அந்த 2, 4, 7 எண்கள் கூட்டுத் தொகை வரும் தேதிகளில் முக்கிய செயல்களை செய்கிறார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment