நடிகர் சங்கம் அவர்களின் சொத்து இல்லை : சிம்புவிற்கு அறிவுரை கூறிய ராதிகா

Share this :
No comments

நடிகர் சங்கத்திலிருந்து விலகும் முடிவை நடிகர் சிம்பு கைவிட வேண்டும் என்று நடிகர் ராதிகா சரத்குமார் கருத்து கூறியுள்ளார். பீப் பாடல் சம்பந்தமாக பிரச்சனை எழுந்த போது தனக்கு உதவ வில்லை என்று கூறி நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாக பீப் ஸ்டார் சிம்பு சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த விவகாரம், தமிழ் திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை ராதிகா சரத்குமார் “நடிகர் சங்கம் ஒன்றும் அவர்களின் சொத்து அல்ல. அது நம்முடைய சங்கம். அவர்கள் உனக்கு உதவவில்லை. ஆனாலும் நீ ஜெயித்து விட்டாய். நடிகர் சங்கத்திலிருந்து விலகும் முடிவை நீ மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment