சைடு பிசினஸை விடாத ஐஸ்வர்யா தத்தா

Share this :
No comments

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தில் அறிமுகமான பெங்காலி நடிகை ஐஸ்வர்யா தத்தா. பள்ளி மாணவி போலிருக்கும் இவர், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்பட இரு படங்களில் தனி ஹீரோயினாக நடித்து வருகிறார். நடிக்க வரும்முன் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார் ஐஸ்வர்யா தத்தா. இப்போது நடிகையாகிவிட்ட பிறகும் அந்தத் தொழிலை அவர் விடவில்லை. அறிந்தவர்கள், தெரிந்தவர்களிடம் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லி கேட்கிறார். நடிகையான பிறகு இது தேவையா என்றால், படிக்கும் போதே இன்சூரன்ஸ் ஏஜெண்டாகிவிட்டேன். அதை விடுவதாக இல்லை என்கிறார் திட்டவட்டமாக. பாலிசியை மாத்திக்காதவர் போலிருக்கு.

No comments :

Post a Comment