நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தி அதன் மூலம் வரும் நிதியை கொண்டு கட்டிடம் கட்ட நடிகர் சங்கம் முடிவெடுத்தது.
அதன்படி, தென்னிந்திய நடிகர்கள் பலர் கலந்து கொண்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி, நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றாது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டியை காண மக்கள் பெருமளவு திரண்டு ஆதரவு தருவார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால் மைதானத்தில் கூட்டமே இல்லாமல் இருந்தது. இதனால் நடிகர் சங்க நிர்வாகிகள் ஏமாற்றமடைந்தனர்.
பொதுமக்கள் வரவில்லை என்று எப்படி நடிகர் சங்க நிர்வாகிகள் ஏமாற்றமடைந்தார்களோ அதைப்போல போட்டியை பார்க்க சென்ற மக்களும் நடிகர்களின் விளையாட்டை பார்த்து ஏமாற்றமடைந்தனர். ஒரு சில நடிகர்களை தவிர மற்ற அனைத்து நடிகர்களும் மிக மோசமாக விளையாடினர்.
நடிகர்கள் கூட்டத்தை விட மக்கள் கூட்டம் குறைவாகவே வந்தது என கிண்டலாக பேசினர் நெட்டிசன்கள். சமூக வலைதளங்களிலும் இந்த கிரிக்கெட் போட்டியை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். நடிகர் சங்கம் தேர்தலில் சரத்குமார், ராதாரவி அணியை எதிர்த்து வெற்றி பெற்ற விஷால், நாசர் அணியின் முதல் தோல்வியாக இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி அமைந்துள்ளது. சரியான திட்டமிடுதலும், பொதுக்களிடம் சரியான அணுகுமுறையும் இல்லாததாலும் மக்களிடம் இந்த கிரிக்கெட் போட்டி தோல்வியடைந்துள்ளதாக பேசப்படுகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. காரணம், இந்த நிகழ்ச்சியை சன் டிவிதான் நேற்று நேரடி ஒளிபரப்பு செய்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
ஒரு ஒவருக்கு ஒருமுறை விளம்பர இடைவெளி வந்த போது, அதிமுகவிற்கு எதிரான, திமுகவின் “சொன்னீங்களே.. செஞ்சிங்களா?’ என்ற விளம்பரம் ஒளிபரப்பாகிக் கொண்டே இருந்தது.
2011ல் சட்டசபை தேர்தல் போது தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளில், எதுவெல்லாம் நிறைவேற்றப்படவில்லையோ, அதை வைத்து அந்த விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டிருந்தது.
கிரிக்கெட் போட்டி என்பதால், கண்டிப்பாக ஏராளமான இளைஞர்கள்தான் இந்த நிகழ்ச்சியை காண்பார்கள். எனவே அவர்களின் ஒட்டுகளை பெறவே திமுக, சன் தொலைக்காட்சி மூலம் காரியம் சாதித்துக் கொண்டதாக தெரிகிறது.
No comments :
Post a Comment