ஒரு இளம்பெண்ணை பிடித்துள்ள பேயை விரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த மக்களுக்கு, பேய், ஆவி, பிசாசு ஆகியவற்றின் மீது அதீத நம்பிக்கை உண்டு. அங்கு பேய் பிடித்துள்ளதாக கூறி, அவ்வப்போது பலருக்கு பேய் ஓட்டப்படுகிறது. ஆனால், அந்த வீடியோவில் இருப்பது போல் பயங்கரமான ஒன்றை இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
பேய் பிடித்திருப்பதாக கூறப்படும் இளம்பெண்ணை, ஒரு வெள்ளை நிற கட்டத்தினுள் அமர வைக்கிறார்கள். பேய் ஓட்டுபவரின் உதவியாளர், அந்த பெண்ணை பிடித்துக் கொள்ள அவர் வாயிலிருந்து ரத்தம் வழிகிறது. மேலும் லத்தீன் மொழியில் ஏதோ முனுமுனுக்கிறார். அதன்பின் அந்த மொழியில் கத்துகிறார்.
No comments :
Post a Comment