நட்சத்திர கிரிக்கெட் விழாவிலும் வெளிப்பட்ட விக்ரம்-சூர்யா பகை

Share this :
No comments


தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாதவர்கள் விக்ரம், சூர்யா. பாலாவின் பிதாமகன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அதன் பின்னர் தொடர்ந்த இவர்களது நட்பு காலப்போக்கில் விரிசல் ஏற்பட்டது. விழாக்களில் சந்தித்தாலும் சம்பிரதாயத்திற்காக கை குழுக்கிகொள்வார்களாம். சில நேரங்களில் அதுவும் கிடையாதாம். இவர்களது பகைக்கு காரணம் என்ன என்பது தற்போது தேவையில்லாததும் கூட.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் விழாவில் தமிழ்திரையுலகம் முழுவது ஆஜர் ஆகினர்(விஜய்,அஜீத் தவிர). விழாவுக்கு வந்த விக்ரம் சூர்யா இருவரும் பேசிக்கொள்ள்வே இல்லை. விழாவின் முடிவில் வெற்றி பெற்ற அணிக்கான கோப்பையை வழங்க கமல்ஹாசன் மற்றும் விக்ரமை அழைத்தார் தொகுப்பாளினி. இது இவர்கள் இருவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது நன்கு வெளிப்பட்டது. அழைப்பை கண்டுகொள்ளாததுபோல் விக்ரம் பின்னே நின்றிருந்தார். சூழ்நிலையை உணர்ந்த கமல்ஹாசன் தானே முன்வந்து தனித்தே கோப்பையை சூர்யாவிடம் வழங்கினார்.

No comments :

Post a Comment