மே 14-க்கு பின் பிரச்சாரத்துக்கு தடை: தேர்தல் அதிகாரி தகவல்
மே மாதம் 14-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 16-ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
மே 16-ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பிரச்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகள், வருகின்ற மே 14 ஆம் தேதி முதல் தொலைக்காட்சிகளில் பிரசாரம் செய்வதையும் நிறுத்த வேண்டும், என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களின் செலவினங்களை பார்வையிட 12 பேர் கொண்ட மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அனைத்து அசையும், அசையா சொத்து விவரங்கள் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும்.
மே மாதம் 14 முதல் 16-ஆம் தேதி வரை அரசியல் கட்சிகள், தொலைக்காட்சியில் பிரசாரம் செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment