இத்தாலிக்கு சென்ற அகதிகள் படகு கடலில் மூழ்கியது : 400 பேர் பலி?

Share this :
No comments


இத்தாலி நாட்டிற்கு சென்ற படகுகள் கடலில் மூழ்கியதில் 400க்கும் மேற்பட்ட அகதிகள் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.


சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் எரித்ரீயா ஆகிய நாடுகளிலிருந்து நான்கு படகுகளில் ஏராளமான அகதிகள், இத்தாலி நாட்டிற்கு மத்திய தரைக்கடல் பகுதி வழியே பயணம் செய்துள்ளனர்.

ஆனால், அவர்கள் கடல் பயணத்திற்கு உதவாத படகுகளில் அவர்கள் பயணம் செய்ததால், கடலில் ஏற்பட்ட அலையில் சிக்கி, அந்த நான்கு படகுகளும் கவிழ்ந்து விட்டதாக தெரிகிறது.

அந்த செய்தியை சோமாலியா தூதர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இத்தாலி அதிபர் “மத்திய தரைக்கடல் பகுதியில் மற்றொரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏராளமன மக்கள் பலியாகி இருக்கலாம் என தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment