உலத்திலேயே இப்படி ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டும்தான் : ராம்கோபால் வர்மா சர்ச்சை டிவிட்

Share this :
No comments


எப்போதும் தனது சமூகவலைத்தளத்தில், சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்து வரும் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா தற்போது நடிகர் ரஜினிகாந்தை வம்புக்கு இழுத்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினியை பற்றி குறிப்பிட்டுள்ள கருத்துகள், ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அழகாக இருந்தால்தான் சூப்பர்ஸ்டார் என்ற பிம்பத்தை உடைத்தவர் ரஜினிகாந்த்’

‘அவர் ஒன்றும் பெரிய அழகில்லை, சிக்ஸ் பேக் இல்லை, உடல் கட்டு இல்லை, இரண்டு மூன்று நடன அசைவுகள் மட்டும்தான் அவருக்கு தெரியும்’

‘இதுபோன்ற ஒரு சூப்பர்ஸ்டாரை உலகத்தின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. இவர் கடவுளுக்கு என்ன கொடுத்தார் என்றும், கடவுள் இவருக்கு என்ன கொடுத்தார் என்றும் நான் யோசிக்கிறேன்’

‘மக்கள் சினிமாவில் எதை ரசிப்பார்கள் என்று எவராலும் யூகிக்க முடியாது என்பதற்கு ரஜினியே சிறந்த உதாரணம்’

என்றெல்லாம் ஏகத்துக்கும் கருத்துகளை பதியவிட்டுள்ளார். இந்த விவகாரம் ரஜினி ரசிகர்களை ஆத்திரமூட்டியுள்ளது.

No comments :

Post a Comment