திமுகவை கைப்பற்ற திருச்சி சிவா முயற்சி?: வாட்ஸ் ஆப்பில் பரவும் செய்தி
திமுக சார்பில் மாநிலங்களைவை உறுப்பினராக இருப்பவர் திருச்சி சிவா. இவர் திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராக அணி திரட்டுவதாக வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் பரவி வருகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெறுங்கி வருவதால், தமிழக அரசியல் கட்சிகள் சமூக வலைதளமான முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப்பில் நூதனமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. சில தினங்களாக தேமுதிக மாவட்ட செயலாளர்களை திமுக தங்கள் பக்கம் இழுக்க இருப்பதாக சிலர் திமுக பக்கம் செல்ல தயாராக இருப்பதாகவும் வாட்ஸ் ஆப்பில் தகவல் பரவியது. தற்போது திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை பற்றிய செய்தி ஒன்று வலம் வருகிறது. அந்த செய்தியில் ஸ்டாலினுக்கு எதிராக திருச்சி சிவா ஆள் திரட்டுவதாகவும். 26 மாவட்ட செயலாளர்கள் கட்சியை கைப்பற்ற திட்டம் தீட்டி போர்க்கொடி தூக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது ஆளும் கட்சியின் பொய் பிரச்சாரம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த வாட்ஸ் ஆப் செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment