விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரைக்கு தடை: விற்பனை நிறுத்தம்
ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து, விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரை உற்பத்தி, மற்றும் விற்பனையை புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் தற்போது நிறுத்தியுள்ளது. பக்க விளைவுகளை ஏற்படுத்தும் இருமல் , வலி நிவாரணி ,ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உள்ளிட்ட 344 மருந்துகளுக்கு மத்திய அரசு கடந்த வாரம் தடை விதித்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது தொடர்பாக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் கால அவகாசம் முடிந்தும் பதில் வராததால், இந்த உத்தரவு பிறபித்தது மத்திய அரசு. இதையடுத்து பிராக்டர் அன்ட் கேம்பலின் விக்ஸ் ஆக்சன் - 500 எக்ஸ்ட்ரா மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையை நிறுத்திவிட்டதாக தற்போது அறிவித்துள்ளது. மத்திய அரசு இதழ் அறிவிக்கையின் படி இருமல் மருந்தான குளோரோபினமின் மாலியேட்+கோடைன் சிரப் சேர்க்கை மருந்து வகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
Labels:
News
,
other
No comments :
Post a Comment