ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாணவிகள் 94.4 %, மாணவர்கள் 87.9% தேர்ச்சி
சென்னை: ப்ளஸ் 2 தேர்வுக்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை இன்று வெளியிட்டது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.9 சதவீதம் பேரும், மாணவிகள் 94.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆண்டு தோறும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த ஆண்டும் வழக்கம்போல் மாணவிகள் 94.4சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் 87.9 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
200க்கு 200 மதிப்பெண் எத்தனை பேர்? பாடங்கள் வரியாக இயற்பியலில் 5 பேர், வேதியியலில் 1703 மாணவர்கள், உயிரியல் பாடத்தில் 775 மாணவர்களும், விலங்கியல் பாடத்தில் 120 மாணவர்களும், தாவரவியல் பாடத்தில் 20 மாணவர்களும், கணிதத்தில் 3,361 மாணவர்களும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
வணிக கணிதத்தில் 1072 மாணவர்களும், வணிகவியலில் 3084 மாணவர்களும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
Labels:
News
,
others
No comments :
Post a Comment