இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

* சர்க்கரைவள்ளிக் கிழங்கை தங்களது அன்றாட டயட்டில் சேர்க்கும் பகுதிகளில் வாழும் தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

எப்படியெனில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பெண்களின் கருவளத்தை அதிகரித்து, ஓவுலேசன் நிகழ்வை மேம்படுத்தி, இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

* இதுவரை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களின் வயது 30-திற்கு மேல் தான் உள்ளது. இதற்கு காரணம் 30 வயதிற்கு மேல் பெண்கள் இறுதி மாதவிடாயை நெருங்கிக் கொண்டிருப்பால், ஒவ்வொரு மாதமும் கருப்பையில் இருந்து ஒன்றிற்கு மேற்பட்ட முதிர்ச்சியடைந்த கருமுட்டைகள் வெளியிடப்படுகின்றன.

இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடும் போது அக்கருமுட்டைகளில் விந்தணுக்கள் நுழைந்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவுகின்றன.

* இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இந்த ஃபோலிக் அமிலம், பருப்பு வகைகள், நட்ஸ், பட்டாணி, அவகேடோ அல்லது வெண்ணெய் பழம், பசலைக்கீரை, வெண்டைக்காய், சிட்ரஸ் பழங்களில் அமிலம் இருக்கும்.

* உயரத்திற்கு ஏற்ற எடை சில ஆய்வாளர்கள், ஒரு பெண் தான் கருத்தரிக்கும் போது, தன் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் நன்கு ஆரோக்கியமாக இருந்தால், இரட்டைக் குழந்தைகள் பிறக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

* இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைக்கும் ஆண்கள், ஜிங்க் சத்து நிறைந்த உணவுப் பொருட்களான கடல் சிப்பி, பச்சை இலைக் காய்கறிள், விதைகள் மற்றும் பிரட் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரித்து, பெண்களின் உடலினுள் செல்லும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட விந்தணுக்கள் நீந்தி கருமுட்டையை அடையும். இதனால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

* ஒன்று அல்லது இரண்டு பிரசவத்தை சந்தித்த பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இரட்டை குழந்தை வேண்டுமென நினைக்கும் தம்பதிகள் முதல் குழந்தைக்கு பின் முயற்சியுங்கள்.

* முக்கியமாக தம்பதிகளின் குடும்பத்தில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்து, அத்தம்பதிகள் இரட்டை குழந்தைக்கு முயற்சித்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

* குட்டையான பெண்களை விட, உயரமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது. அதுவும் 5 அடி 6 அங்குலம் கொண்ட பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.

உங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க வேண்டுமா?


News Paper In Sri Lanka 20-05-2016


News Paper In Sri Lanka : 19-05-2016



வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களை அதிக சிரமமின்றி கடக்க உதவும் `ஒரு டஜன் யோசனைகள்’ பகுதியில், இந்தமுறை பாஸ்போர்ட் வாங்குவதற்கான வழிமுறைகள்! விண்ணப்பம், கட்டணம், புதுப்பித்தல், காத்திருப்பு நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதோ...

விண்ணப்பம்

புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிப் பவர்கள்
http://www.passportindia.gov.in
என்ற ஆன்லைன் முகவரி மூலமாகவே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை உறுதிசெய்யும் விதமாக உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் இ-சேவை மையத்தின் முகவரியும், உங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தேதி, நேரமும் உங்களுக்கு பதிலாக கிடைக்கும். பிறகு, நீங்கள் வாங்கும் பாஸ்போர்ட்டுக்கு உரிய கட்டணத்தை இணையதளம் மூலமாகவோ அல்லது எஸ்பிஐ (SBI) வங்கி சலான் மூலமாகவோ செலுத்தி, உரிய நேரம் மற்றும் தேதியில் இ-சேவை மையத்துக்குச் செல்லவும்.

இணைக்க வேண்டியவை!

பிறப்புச் சான்றிதழ் (ஜனவரி 26, 1989-க்குப் பிறகு பிறந்தவர்கள், வருவாய்த்துறை அல்லது பதிவுத்துறை வழங்கிய பிறப்புச் சான்றிதழ்களை மட்டுமே ஆதாரமாகக் காட்ட முடியும்), இருப்பிடச் சான்றிதழ், கல்வித்தகுதிக்கான சான்றிதழ், பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் செலுத்திய ரசீது. மேற்கண்ட ஆவணங்களின் நகல்களை விண்ணப்பத்தாரர் சுயகையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும். இந்த நகல்களின் அசல் ஆவணங்களை, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தன்று கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும்.

வெளியூரிலும் விண்ணப்பிக்கலாம்

வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அப்பகுதியிலேயேகூட பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க லாம். அவர்கள் தங்கிப் படிக்கும் இடத்தின் முகவரியை ‘தற்போதைய முகவரி’யாக அளித்து, அதற்கான ஆதாரத்தை அந்தக் கல்வி நிறுவன முதல்வரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

காத்திருப்பு நேரம்

பொதுவாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து விண்ணப்பம் காவல்துறைக்கு அனுப்பப்படும். நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பகுதியில்தான் வசிக்கிறீர்களா, ஏதேனும் குற்ற வழக்குகள் உங்கள் பெயரில் பதிவாகியுள்ளனவா என உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து (5 முதல் 10 நாட்களில்) விசாரித்து, நீங்கள் குற்றமற்றவர் என காவல்துறை அறிக்கை பெற்ற பிறகே, பாஸ்போர்ட் வழங்கப்படும். எனவே, நார்மல் பாஸ்போர்ட் வாங்க குறைந்தது 25 நாட்கள் ஆகும்.

‘நான் உடனே வெளிநாடு செல்ல வேண்டும்’ என்பவர்கள் தட்கல் முறையில் 3 முதல் 5 நாட்களில் பாஸ்போர்ட் பெறமுடியும். ஆனால், காவல் துறையினரின் சரிபார்ப்புக்கு முன்னரே பாஸ்போர்ட்டை உங்கள் கையில் கொடுப்பதால் மூன்று வகையான இருப்பிடச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணமும் கொஞ்சம் அதிகம். போலீஸ் விசாரணைக்கு முன்னரே பாஸ்போர்ட்டை வழங்கினாலும், விசாரணையில் உங்கள் மீது வழக்குகள் இருப்பது தெரிய வந்தால், உடனே பாஸ்போர்ட் முடக்கப்படும்.

கட்டணம்

நார்மல் பாஸ்போர்ட்

(36 பக்கங்கள் கொண்டது) - 1,500 ரூபாய்.

60 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட் (அடிக்கடி வெளிநாடு செல்கிறவர்கள் பயன்படுத்துவது) - 500 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும். தட்கல் - 3,500 ரூபாய்

மைனர் - 1,000 ரூபாய்

டேமேஜ் / லாஸ்ட் - 3,000 ரூபாய்

புதுப்பித்தல்

ஒருமுறை எடுக்கும் பாஸ்போர்ட் 10 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும். தற்போது பாஸ்போர்ட்டில் வருடங்களை நீட்டித்து ‘ரெனியூவல்’ செய்யப்படுவதில்லை. எனவே, பாஸ்போர்ட் காலாவதியானால் மீண்டும் புது பாஸ்போர்ட்தான் பெற வேண்டும். காலாவதி தேதிக்கு இன்னும் ஓராண்டு இருக்கும்போது தொடங்கி, காலாவதி தேதிக்கு பின் மூன்று ஆண்டுகள் வரை விண்ணப்பிக்கலாம். பழைய பாஸ்போர்ட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். விலாசம் மாறியிருந்தால் அதற்கான சான்றிதழ்களுடன் புதுப்பிக்கலாம். பாஸ்போர்ட் புதுப்பிக்க
http://www.passportindia.gov.in
என்ற இணைய முகவரியில், ரீ-இஷ்யூக்கான காரணத்தை க்ளிக் செய்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இரண்டாவது முறை விண்ணப்பித்தாலும் புதிதாக விண்ணப்பிப்பவர் போலவே பாஸ்போர்ட் சேவை மையங்களை அணுகி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வெளிநாட்டில் தங்கி இருக்கும்போது பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக வேண்டும்.

குழந்தைகளுக்கு

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் எடுக்கும்போது, அவர்களின் பெற்றோருக்கு பாஸ்போர்ட் இருந்தால் காவல்துறை அறிக்கை தேவைப்படாது.

பெயர் மாற்றம்

பாஸ்போர்ட்டில் பெயரில் ஏதேனும் தவறுகள் இருந்தால், பெயர் சரியாக இருக்கும் ஆவணங்களை மீண்டும் சமர்ப்பித்து, பாஸ்போர்ட்டை ரீ-இஷ்யூ செய்துகொள்ளலாம். ‘மேஜர் நேம் சேஞ்ச்’ எனில், மாற்றப்பட்ட பெயரை, தங்களுடைய நிரந்தர முகவரி மற்றும் தற்போதைய முகவரி உள்ள இடங்களில் பிரசுரமாகும் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து, அந்த செய்தித்தாளோடு மற்ற தேவையான ஆவணங்களை இணைத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

திருமணத்துக்குப் பிறகு...

கணவரின் பெயரை தங்கள் பெயருடன் இணைக்க விரும்பும் பெண்கள் நவம்பர் 24, 2009-க்குப் பிறகு திருமணமாகி இருந்தால் திருமணச் சான்றிதழை இணைத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் திருமணச் சான்று அல்லது ஜாயின்ட் நோட்டரி அஃபிடவிட் (Joint Notary Affidavit) இணைக்க வேண்டும்.

பாஸ்போர்ட் தொலைந்தால்...

உடனே காவல் நிலையத்தில் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் உங்களுடைய பாஸ்போர்ட்டை பயன்படுத் தாதவாறு அது முடக்கப்படும். உங்களுடைய பாஸ்போர்ட் கிடைக்காத பட்சத்தில், அவர்கள் ‘Non Traceable’ சான்றிதழ் தருவார்கள். பிறகு பாஸ்போர்ட் ரீ-இஷ்யூவுக்காக விண்ணப்பித்து, தொலைந்த பாஸ்போர்ட்டின் நகல் (இருந்தால்), ‘அனக்சர் எல்’

என்ற உறுதிமொழிப் பத்திரம்,

நோட்டரி பப்ளிக் ஒப்புதல் இவற்றை எல்லாம் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏமாற வேண்டாம்!

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள், ஏஜென்டுகளை நாடும்போது கவனம் தேவை. அவர்கள் இஷ்டம்போல பணம் வசூலிக்கக்கூடும். உங்கள் பகுதியில் (வட்டாட்சியர் அலுவலகத்தில்) உள்ள இ-சேவை மையத்தை அணுகினால், உரிய செலவில் பாஸ்போர்ட் பெறமுடியும்.

மேலதிக தகவல்கள்

பாஸ்போர்ட் தொடர்பான சந்தேகங்களை மேலும் தெளிவுபடுத்திக்கொள்ள
www.passportindia.gov.in
என்ற இணையதள முகவரியையோ அல்லது 1800-258-1800 என்ற டோல்ஃப்ரீ எண்ணையோ தொடர்புகொள்ளுங்கள்.

பாஸ்போர்ட் வாங்கலாம் வாங்க!


உங்களுக்கு கிடைக்காததை உங்கள் குழந்தைக்கு கொடுக்க விரும்புகிறீர்கள். ஆனால், அது உங்கள் குழந்தைக்கு பிடிக்குமா என்று தெரிந்து தான் தருகிறீர்களா என்பது தான் முக்கியமான கேள்வி.

பெற்றோர்கள் செய்யும் சில தவறுகள் குழந்தைகள் மத்தியில் தன்னம்பிக்கை குறைய பெரும் காரணமாக மாறிவிடுகிறது…

குழந்தைகள் என்றால் தவறு செய்வார்கள் தான். அதற்காக அவர்களிடம் திட்டவோ, கத்தவோ கூடாது. பலமுறை தவறுகள் செய்தாலும் புரியும்படி சொல்லிக் கொடுங்கள். 

திட்டிக்கொண்டே இருப்பது ஓர் தருணத்தில் திட்டத்தானே போகிறீர்கள் என்ற மனப்பான்மை வந்துவிடும், மேலும் தன்னம்பிக்கை குறைந்துவிடும்.

திட்டுவது ஒருபுறமும், அதீத அக்கறை ஒருபுறமும் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை குறைய காரணியாக இருக்கின்றன. 

எதற்கெடுத்தாலும் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் தன்னால் முடியும் என்ற எண்ணத்தை குறைத்து விடுகிறது. எனவே, உதவியை நாட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

தவறுகள் செய்தால் தட்டிக் கொடுத்து புரிய வையுங்கள். பொதுவிடங்களில் மற்றவர்கள் முன்னே அவமானம் செய்ய வேண்டாம். குழந்தையாக இருந்தாலும், அவர்கள் வயதுடைய நபர்கள் முன்பு அவர்களுக்கும் கெளரவம் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் கூட தாங்கள் செய்த காரியங்களுக்குக் பாராட்டு எதிர்பார்பார்கள். எனவே, அவர்கள் சின்ன சின்ன செயல்களுக்கும் பாராட்டுங்கள். அப்போது தான் அவர்களுக்குள் தன்னம்பிக்கை வளரும்.

மற்ற குழந்தைகள் நன்கு படிக்கின்றன என்றால், உடனே தங்கள் குழந்தையுடன் அமர்ந்துக் கொண்டு படி, படி நச்சரிப்பது கூடாது. உங்கள் போட்டி மனப்பான்மைக்கு குழந்தைகளை பலியாக்கிவிட வேண்டாம்.

ஒழுக்கம் மிகவும் அவசியம் தான். ஆனால், அதற்காக தொட்டதற்கெல்லாம் ஒழுக்கமாய் இரு, ஒழுக்கமாய் இரு என கூறி குழந்தைகளை கூண்டுக்குள் அடைத்துவிட வேண்டாம். இது அவர்களுக்குள் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படுத்தலாம்.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்


News Paper In Sri Lanka : 18-05-2016


ஆயிரம் கனவுகளுடன் ஆரம்பமாகிறது ஒவ்வொரு ஜோடியின் திருமண வாழ்க்கையும்! ஆனால் திருமணத்திற்குப் பின்பு, அடுக்கடுக்கான பிரச்சினைகளால் கருத்து மோதல்களுடன் வாழும் தம்பதிகளே அனேகம்.

விவாகரத்து கோருபவர்களும் அதிகரித்து வருகிறார்கள். இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் என்ன காரணம்? திருமணத்துக்கு முன்பே எல்லா வகையிலும் ஒரு ஜோடி திருமண பந்தத்திற்கு தயாராகாததுதான் காரணம் என்கிறது புதிய ஆய்வு!

இளம் ஜோடிகள் திருமணத்திற்கு முன்பு எப்படி தயாராக வேண்டும், திருமணத்திற்குப் பின்பு பிரச்சினைகளை ஏற்படுத்தும் விஷயங்கள் எவை என்பதில் எப்படி தெளிவு பெறுவது? என்பது பற்றி அந்த ஆய்வு சொல்லும் உண்மைகளை அலசுவோம் வாருங்கள்!

திருமணத்திற்கு முந்தைய கவுன்சலிங்: ‘பெண்ணிடம் கொஞ்சம் பேச வேண்டும்’ என்று பெண் பார்க்கச் செல்லும் இளைஞர்கள் கேட்பது வாடிக்கை. கொஞ்சமல்ல நிறையவே பேச வேண்டும் என்கிறது நவீன ஆய்வு.

திருமண ஜோடிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வது மட்டுமல்லாமல், இருவரும் என்னென்ன ஆசைகள், நோக்கங்கள், எதிர்பார்ப்புகளுடன் திருமண பந்தத்தில் இணைகிறார்கள், அவர்கள் இருவருக்கும் இடையே உறவு ஒத்துவருமா என்பதை தகுந்த மனநல ஆலோசகர் முன்னிலையில் கவுன்சலிங் பெற்று திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்கிறது அந்த ஆய்வு.

ஆமாம் திருமணத்திற்கு பின் முட்டி மோதிவிட்டு கவுன்சலிங் செல்வதைவிட, திருமணத்திற்கு முந்தைய கவுன்சலிங் இருவரது மணவாழ்விலும் பூங்காற்று வீச புதிய பாதையை காட்டும் என் கிறார்கள் ஆய்வாளர்கள். காதலர்களுக்கும் இந்த கவுன்சலிங் கட்டாயம் என்றும் அந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

என்னென்ன விஷயங்களை இளம் ஜோடியினர் கவனிக்கவேண்டும் என்பது பற்றிய ஆய்வு கூறும் பட்டியல் இனி...

எதிர்பார்ப்புகள்: ஆசைகளுடனே இளம் ஜோடி இல்லறத்தில் இணைகிறது. இதில் எதிர்பார்ப்புகள் இருவருக்கும் இருக்கும். துணையின் எதிர்பார்ப்புகள், ஆசைகள் என்ன என்பது இருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

பொதுவாகவே ஜோடிகள் ஆசைகளை பகிர்ந்து கொள்வது உண்டு. ஆனால் எதிர்பார்ப்புகளில் எது நியாயமானது, எது நடைமுறைக்கு சாத்தியமானது என்பது பற்றிய தெளிவு வேண்டும். இதற்குத்தான் கவுன்சலிங் தேவைப்படுகிறது. நிறைவேறாத, அதிகபட்ச எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினால், வெறுப்பும், மன அழுத்தமும் எளிதில் தொற்றிக் கொள்ளும்.

பிறகு அதுவே பிரச்சினைகளின் வேராக இருந்து பிரிவினைக்கு காரணமாகிவிடும். பல நேரங் களில் துணைவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது துணைவிக்கும், துணைவியின் எதிர்பார்ப்பு துணைவருக்கும் வெளிப்படையாக தெரியாததால்கூட பிரச்சினைகள் வளர்வதுண்டு.

பழைய நடத்தைகள்: தம்பதிக்குள் பிரச்சினையை உருவாக்கும் முக்கியமான காரணி, திருமணத்திற்கு முந்தைய நடத்தைகள். மனம் விரும்பாத அல்லது தெரிந்தோ, தெரியாமலோ செய்துவிட்ட ஒரு தவறால், மனதில் குற்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.

அது எப்போது தனது துணைக்கு தெரியவருமோ? என்ற உறுத்தல் வாழ்க்கையை பாதிக்கும். வேறு யாராவது குறுக்கிட்டு உண்மைகளை சொல்லி வாழ்க்கையை நாசமாக்கிவிடுவார்களோ? என்ற பய உணர்வுகூட எழும்.

அதற்காக ‘மனம் விட்டு பேசுகிறேன்’ என்று கடந்த கால விஷயங்களை எல்லாம் சொல்லி பாவ மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. திருமணத்திற்கு பின் இருவரும் எப்படி வாழ வேண்டும், எப்படி உண்மையாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். கடந்த கால உண்மைகள் அனைத்தையும் சொல்லிவிட இயலாது என்பதை இருவரும் புரிந்திருக்க வேண்டும்.

என்றாவது ஒருநாள், நம்மைப் பற்றிய எதிர்மறை ரகசியம் யார் மூலமாகவோ துணைவருக்கு தெரியவந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற பக்குவத்தையும் இருவரும் பெற்றிருக்க வேண்டும்.

பல மகிழ்ச்சியான தம்பதிகள்கூட இந்த இடத்தில்தான் தடம் மாறிவிடுகிறார்கள். கடந்த கால கசப்புகள் நிகழ்கால இன்பங்களை இல்லாமல் செய்து விடக் கூடாது. கடந்த காலத்தைவிட வாழும் காலம்தான் முக்கியம்.

விட்டுக்கொடுத்தல்: விட்டுக்கொடுப்பது வாழ்க்கையில் பல சந்தோஷங்களுக்கு வழிவகுக்கும். ஆனால் யார் விட்டுக்கொடுப்பது? எவற்றை விட்டுக்கொடுப்பது? என்பதில் தெளிவு இல்லாததால்தான் தம்பதிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

சில நேரங்களில் விட்டுக்கொடுத்தல் சுயமரியாதையை பாதிக்கும் விஷயமாக இருக்கும். அந்த நேரத்தில் மற்றவர் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டு இறங்கி வர வேண்டும்.

எப்படிப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி வருகிறது, இதையெல்லாம் தவிர்க்க என்ன வழி என்பதை இருவரும் யோசித்து அதற்கேற்ப ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கலாம். பிரச்சினைகளை உருவாக்கும் சூழல்களை தவிர்க்கலாம்.

சந்தேகம்: தேவை இல்லாமல் சந்தேகப்படுவது, கற்பனை செய்து விஷயங்களை மிகைப்படுத்துவது இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகளை பெரிதாக்கும்.

சந்தேகங்களை அமைதியாக கேட்டு தெளிவு படுத்துவது, தவறுகளை திருத்திக் கொள்வதன் மூலமாக சந்தோஷமாக வாழலாம். சந்தேகத்தை என்ன செய்ய வேண்டும், எப்படி விரட்ட வேண்டும் என்பது பற்றி கவுன்சலிங்கில் சிறந்த தீர்வுகள் வழங்கப்படும்.

மற்றவர் தலையீடு: தம்பதிகள் இருவரும் மன ஒற்றுமையுடன் இருந்தாலும் குடும்ப நபர்களால் கருத்து வேற்றுமை ஏற்படலாம். மற்றவர்களின் செயல்களுக்கு நாம் குற்றவாளியாக்கப்படலாம்.

அந்த நேரத்தில் சமாதானப்படுத்துவது, சமாளிப்பது எல்லாம் தனித்திறமை. இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒருவர் துணை, மற்றொருவருக்கு தேவை.

குழந்தையில்லாத தம்பதிகளாக இருந்தால் மற்றவர்கள் தலையீடும், அறிவுரைகளும் தவிர்க்க முடியாது. சிலநேரம் ஆலோசனைகள் வழங்குவோம் என்று மேலும் நோகடித்து விடுபவர்களும் உண்டு. இதுபோன்ற சமயங்களில் தம்பதியர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவாக செயல்பட வேண்டும்.

வெளிநாடுகளைப் போன்று இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய கவுன்சலிங் பிரபலமாகவில்லை. சிங்கப்பூரில் கவுன்சலிங் அலுவலகத்தில் முன்பதிவு செய்துவிட்டு புதுமண தம்பதிகள் காத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு அவர்களின் மனநிலைக்கேற்ப, குடும்ப சூழலுக்கேற்ப தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அது அவர்களுடைய திருமண வாழ்க்கையை காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். திருமண பந்தத்தில் வசந்தம் வீச இந்திய இளம் ஜோடிகளும் தகுந்த கவுன்சலிங்கை பெறலாம்!

கல்யாண வாழ்க்கையை களங்கப்படுத்தும் முந்தைய ரகசியங்கள்


News Paper In Sri Lanka : 17-05-2016


சென்னை: ப்ளஸ் 2 தேர்வுக்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை இன்று வெளியிட்டது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.9 சதவீதம் பேரும், மாணவிகள் 94.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆண்டு தோறும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த ஆண்டும் வழக்கம்போல் மாணவிகள் 94.4சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் 87.9 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

200க்கு 200 மதிப்பெண் எத்தனை பேர்? பாடங்கள் வரியாக இயற்பியலில் 5 பேர், வேதியியலில் 1703 மாணவர்கள், உயிரியல் பாடத்தில் 775 மாணவர்களும், விலங்கியல் பாடத்தில் 120 மாணவர்களும், தாவரவியல் பாடத்தில் 20 மாணவர்களும், கணிதத்தில் 3,361 மாணவர்களும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வணிக கணிதத்தில் 1072 மாணவர்களும், வணிகவியலில் 3084 மாணவர்களும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாணவிகள் 94.4 %, மாணவர்கள் 87.9% தேர்ச்சி

This video to modern mooda nambikkai vaathigal on Facebook, Twitter, WhatsApp, mobile with the name of share, like.

Hello Facebook-WhatsApp-Mobile - Modern Mooda Nambikkai Vaathikale


உக்ரைன் நாட்டில் தாய் ஒருவர் தன்னுடைய இரு பிள்ளைகளுடன்ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டின் Kharkiv மெட்ரோ ரயில் நிலையத்திற்கு தாய் ஒருவர் தன்னுடைய இரு பிள்ளைகளுடன் வந்துள்ளார்.

அந்த பிள்ளைகளுக்கு 5, 12 வயதுஇருக்கும், ப்ளாட்பாரத்தில் தன்னுடைய இரு பிள்ளைகளின் கரங்களையும் பிடித்துக் கொண்டு வந்த தாய், தற்கொலை செய்து கொள்வதற்காக ஓடும் ரயில் முன் குதித்துள்ளார்.

எனினும் அதிர்ஷ்டவசமாக அவர்களது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நொடிப்பொழுதில் நிகழ்ந்த விபரீதம்... குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்த பெண்!...


அமெரிக்காவின் டும்ளின் நகரில் செயல்பட்டு வரும் மனநலகாப்பகத்தில் இருந்த, 29 வயதான கைதி ஒருவர், சிறியரக மொபைல் போன் ஒன்றை விழுங்கியுள்ளார்.

விழுங்கி 6 மணிநேரம் கடந்த பின்னர், அந்நபர் அங்கிருந்த ஊழியர்களிடம் நான் மொபைல்போனை விழுங்கிவிட்டேன் என கூறியுள்ளார்.

மொபைல்போனை விழுங்கிய காரணத்தால், அந்நபருக்கு விடாப்பிடியாக வாந்தி வந்துகொண்டே இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைச்சென்றனர்.

எண்டோஸ்கோப் மூலம் ஒரு நீண்ட மெல்லிய நெகிழ்வான குழாயின் வழியாக ஒளி மற்றும் வீடியோ கமெராவினை பயன்படுத்தி பார்த்தபோது, உணவுக்குழாயின் வழியாக மொபைல்போன் வயிற்றுக்குள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

அதன் பின்னர் அவரது வயிற்றுப் பக்கவாட்டில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மொபைல்போனை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். -

மொபைல்போனை விழுங்கிய வாலிபர்!... என்ன கொடுமை சார் இது?...


இந்த சமூகம் ஆண்கள் மற்றும் பெண்களால் கட்டமைக்கப்பட்டதுதான். ஆனால் நடை, உடை, பாவனை போன்றவற்றில் இருவரையும் இந்த சமூகம் பார்க்கும் பார்வை என்னவோ வித்தியாசம்.

ஒரு செயலை ஆண் செய்யும் போதும் ஒரு விதமாக அணுகும் சமூகம் பெண்கள் செய்யும் போது வேறு வித கண்ணோட்டத்தில் அணுகும். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

தனது மகனை வேலைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூட பெற்றோர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால் ஒரு சிறந்த நிறுவனத்தில் பணியென்றாலும் அது இரவு பணியாக இருந்தால் தனது மகளை பக்கத்து நகருக்கு அனுப்பக்கூட எந்த பெற்றோர்களும் தயாராக இல்லை என்பது உண்மை.

பெண்கள் பிறரிடம் சிரித்து பழகினால், அவர்களது அணுகுமுறைய பாராட்டுவார்கள், ஏனெனில் அவள் இனிமையாக பழகுகிறாள், ஆனால் ஆண் சிரித்தால், பிறரிடம் ஜொள்ளு வடிக்கும் ஆண்கள் என்று கூறுவார்கள்.

இதில், இன்னெரு ரகமும் உண்டு, ஒரு பெண் பொது இடத்தில் சத்தமாக சிரித்து பேசினால் அதிகப்பிரசங்கித்தனம், அநாகரீகம் என்பார்கள். அதுவே ஒரு ஆண் சத்தமாக சிரித்தால் அது நாகரீகம் என்பார்கள்.

ஒரு ஆணுக்கு தான் விரும்பிய நண்பர்களுடன் சுற்றும் வாய்ப்பை அளிக்கும் சமூகம். பெண்களூக்கு அளிப்பதில்லை. ஆண் என்பவன் இரவு எத்தனை மணிக்கு என்றாலும் வீட்டுக்கு வரலாம். ஆனால் பெண்களுக்கு இரவில் தோழிகளுடன் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. ஆண் எத்தனை நண்பர்கள் வேண்டுமென்றாலும் வைத்து கொள்ளலாம்.

எப்படி உடையணிய வேண்டும், மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும், எப்படி பழக வேண்டும் என்று எதற்கெடுத்தாலும் பெண்களுக்கு உபதேசம் செய்யும் பெற்றோர்கள். ஆண்களுக்கு அதை சொல்லி கொடுப்பதற்கு தவறி விடுகின்றனர்.

அமைதி குணம் என்பது பொதுவாக பெண்களுக்கே உரித்தான ஒன்றாக கூறப்படுகிறது, ஒரு பெண் அமைதியாக இருந்தால் அடக்க ஒடுக்கமும் நிறைந்த பெண் என்பார்கள்.

மொத்தத்தில், இந்த சமூகம் ஆண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் எனவும் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் எனவும் சில கருத்துக்களை கூறுகின்றனர்.

பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமா?


Birthday wishes to 'Amma' | Letter from a Common Man


Tirupati Balaji Live Darshan Abhisekam


என்று நாம் வாழ்க்கை கற்பிக்கும் பாடத்தை கற்பதை நிறுத்துகிறோமோ அன்றே நாம் இறந்து விடுகிறோம் என உலக அறிஞர்கள் கூறுகின்றனர். இது உண்மையும் கூட. நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்கள், வாழும் மனிதர்கள், நமது உறவுகள் என நமது வாழ்க்கை தான் நமது பாடப் புத்தகமாக விளங்குகிறது.

ஆண்களை உசுப்பேற்ற பெண்கள் செய்யும் ஏழு விஷயங்கள்! இதில் இருந்து நாம் கற்றுக் கொண்டதை வைத்து தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர, மென்மேலும் தவறு செய்யக் கூடாது.

இதில் முக்கியமானது உறவுகள். உறவில் நம்முடன் மிக நெருக்கமான உறவாக அமைவது காதல். அது திருமணத்திற்கு முந்தையதாக இருக்கலாம் அல்லது பின்னே அரும்பிய காதலாக இருக்கலாம்.

கட்டுனா பஞ்சாபி பொண்ணுகள தான் கட்டனும் பாஸ்..., ஏன்னு தெரியுமா? இந்த முதல் காதல் தருணங்கள் நமக்கு நிறையவற்றை கற்றுக் கொடுக்கும். அதில் முக்கியமாக சிலவற்றை பற்றி இனிக் காணலாம்...

பாலினம் அறிதல் என்னதான் உடன் பிறந்த சகோதரன், சகோதரி இருப்பினும். மன ரீதியாக, உடல் ரீதியாக ஆண், பெண் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சவால்கள் பற்றி ஓர் நபர் முதன் முதலில் முழுவதுமாக அறிந்துக் கொள்வது முதல் உறவில் தான். அது முதல் காதலாக இருக்கலாம் அல்லது முதல் திருமணமாக இருக்கலாம்.

அதீத நம்பிக்கை முதல் காதல் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும் சிறந்த பாடம் அதீத நம்பிக்கை. ஓர் நபர் மீது அதீத நம்பிக்கை வைப்பது எவ்வளவு மகிழ்ச்சியை தரும், வலியை தரும் என்பதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.

வலி எல்லோருடைய பிரிவும் வலி மிகுந்தது தான். ஆனால், காதல் பிரிவு தரும் வலி தான் முதன்மை வகிக்கும். நமது வாழ்க்கையை இவருடன் தான் வாழ போகிறோம் என ஒரு கனவுக் கோட்டை கட்டி அது இடிந்து விழும் போது ஏற்படும் வலி சொல்லில் அடங்காதது.

பெண்மை
ஓர் ஆண் பெண்மையை முழுவதுமாக உணர்வது முதல் காதலில் தான். உண்மையாக ஓர் பெண்ணை முதன் முதலில் நேசிக்கும் ஒருவனுக்கு உடலை விட மனது தான் சிறந்தது என்பது தெரியவரும். அதன் பிறகு யார் ஒருவனும், அடிடா அவள, ஒதடா அவள என கூக்குரல் இடமாட்டான்.

கஷ்டம் தீர்வு காதலிப்பவர்கள் பலரும் கூறும் வசனம் "இதவிட பெரிய கஷ்டமா ஒண்ணு இருக்கா பாஸ்". ஆம், சில நேரங்களில் அதீத அன்பு, அரவணைப்பும் கூட எரிச்சலை ஊட்டும்.

பெண்கள் இந்த தவறை அதிகம் செய்வதுண்டு. நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிக்காதே, அங்கு போகாதே, இந்து போகாதே என கூறுவதை ஆண்கள் கஷ்டமாக தான் பார்ப்பார்கள்.


முதல் காதல் கற்பிக்கும் 5 வாழ்க்கை பாடங்கள்!


நாலு, ஐந்து வயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் 'நெருக்கத்தைக்'கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும்.

அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.

7-8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள்.

இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில்தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.

இதிலும் சிலர் டிவியில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம்.

இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.

சில குழந்தைகள் இருட்டு என்றாலே பயப்படுவார்கள். அவர்களை 'இருட்டு என்பது ஒருநாளின் கொஞ்சப்பகுதி. அவ்வளவுதான்' என்று தைரியமூட்டுவதோடு, முதலில் குறைந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து செல்லலாம்.

குறைந்த இருட்டுக்கு பழகிய நேரத்தில் நல்ல கும்மிருட்டில் அழைத்துச்செல்லலாம். அவ்வப்போது தைரியமான சரித்திர, புராணக்கதைகளை சொல்லலாம். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது இருட்டு பயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு விடும்.

குழந்தைகள் தனியாக தூங்க ஏற்ற வயது


14 Inspiring Quotes From Super Successful People

14 Inspiring Quotes From Super Successful People


பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைப் பற்றி அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதில்லை. பொதுவாக அவர்கள் மிக நிதானமாக ஓட்டுவதாகவும், அதிக வேகம் போவதில்லை என்றும் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த 15 வருடங்களாக பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்திருக்கிறது, குறிப்பாக நகரப் பெண்கள். சற்று கூர்மையாகக் கவனிக்கும்பட்சத்தில், வெகு சில பெண்களே சரியாகவும் கட்டுப்பாட்டுடனும் வண்டி ஓட்டுகிறார்கள்.

1. தெருமுனை வருவதற்கு சில அடிகள் முன்னமே ப்ரேக் பிடித்து நின்றே திரும்பவேண்டும். எதிரிலோ குறுக்கிலோ வாகனமே வரவில்லையென்றாலும் பரவாயில்லை.

2. எந்த வாகனத்தையும் அவசரப்பட்டு முந்தவேண்டாம். குறிப்பாக இடப்பக்கமாக முந்துவது கூடவே கூடாது. எதிர் வாகனங்களைப் பார்த்தே வலதுபக்கமாக, அதுவும் அத்தியாவசியமெனில் முந்தலாம்.

3. பதற்றமாக இருக்கும்போது இருசக்கர வாகனத்தை எடுக்கக் கூடாது. சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு பின் வண்டியை எடுக்கலாம். பதற்றமாகி பின் கிளம்பும்போது மெதுவாகச் செல்வது உத்தமம்.

4. ஹெல்மெட் கட்டாயம் அணிந்துகொண்டுதான் செல்லவேண்டும்.

5. பெண்கள் முகம் முழுக்க துப்பட்டாவை சுற்றி, ஒரு பெரிய கண்ணாடி அணிந்துகொண்டு நீளக் கையுறைகளுடன் செல்வது தற்போது அதிகமாக தென்படும் சாலைக் காட்சிகளில் ஒன்று. கூடியமட்டும் இப்படி செல்வதைத் தவிர்க்கலாம்.

அப்படி செய்யும்போது சுவாசம் முட்டாமலும், தலையில் ஹெல்மெட் அணிந்தும் கொஞ்சம் மங்கல்குறைந்த கண்ணாடி அணிந்து செல்வது மிக நல்லது. சரும பாதுகாப்பு முக்கியம்தான். அதைவிட உயிர் பாதுகாப்பு முக்கியம்.

6. வாகனம் ஓட்டும்போது பாட்டு கேட்டுக்கொண்டு செல்வது, ஹெட்ஃபோன் மூலம் பேசிக்கொண்டே செல்வது அறவே வேண்டாம்.

7. பக்கக் கண்ணாடிகளைப் பார்க்காமல் வண்டியைத் திருப்பவோ நிறுத்தவோ சாலை கடக்கவோ கூடாது.

8. வண்டியின் பிடியும், உட்காரும் நிலையும் ஆரம்பிக்கும்போது எந்த அளவு பிடிமானமும் கட்டுப்பாடும் இருக்கிறதோ, அது ஓட்டும்போதும், ப்ரேக் பிடித்து நிறுத்தும்போதும் இருக்கவேண்டும்.

9. இரண்டுபேருக்கு மேல் செல்வதை கூடியமட்டும் தவிர்க்கவும்.

10. பிரச்சனைகளை விவாதித்தபடி வாகனம் ஓட்டுவது அறவே தவிர்க்கவும். (இந்த டிப்ஸ் தம்பதிகளுக்கும், காதலர்களுக்கும்)

- இது அடிப்படை டிப்ஸ்கள் தான். இதை பின்பற்ற ஆரம்பித்தால் மற்ற விஷயங்கள் தானாகவே பிடிபட்டுவிடும்.

வாகனம் ஓட்டுவது என்பது நேர சேமிப்பு, எளிதில் சென்றடைவது போன்றவைகளை விட, அதுவும் ஒரு கலை. அதைக் கலைநயத்துடன் முழுமையாக உணர்ந்து செய்வது இன்னும் உன்னதம்

இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் கவனிக்க வேண்டியவை


பெற்றோருக்கு பக்குவமான பத்து டிப்ஸ் :

பொதுவாக 3 வயதுக்குமேல் ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். 6 வயதுக்குமேல் அதன் குணம், செயல்பாடுகளில் புதுப்புது மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதனால், குழந்தையை சரியாக ஹேண்டில் செய்வது அவசியமாகிறது.

* ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது.

குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும்.

* அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக 'மெய்ன்டெய்ன்' செய்து வரவேண்டும்.

6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது.

* மூன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். 18 வயது ஆகும்வரை ஒரே டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.

* பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது.

வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. 'பாக்கெட் மணி' கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும்.

* குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். ஸ்கூல் டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும்.

* குழந்தையை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. அவ்வப்போது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். தினமும் 'வாக்கிங்' அழைத்துச் செல்வதும் அவசியம்.

* குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும்.

இதற்காக, அம்மா, அப்பா இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி யாரேனும் ஒருவர் தோற்பதுபோல் நடித்து, 'இதெல்லாம் சகஜம். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்' என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதையும் 'டேக் இட் ஈஸி'யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

* பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும்.

பிரச்சினை எப்படி வந்தது? ஏன் வந்தது? அதற்கு என்ன தீர்வு? - இந்த மூன்று விஷயங்களையும் தைரியமாக அணுக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

* குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். 

எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது.

* கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது.

மொத்தத்தில், அறிவு, அன்பு, உணவு - இந்த மூன்றையும் உங்கள் குழந்தைக்கு எப்பவும் கொடுக்க தயாராக இருங்கள். உங்கள் குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள்.

உங்கள் குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள்... தோற்றால் தட்டிக்கொடுங்க