ரஜினி மேட்டரா...? கடவுளுக்குதாம்பா தெரியும்...
ரஜினி குறித்து யாரும் இதுதான், இப்படிதான் என்று எதையும் திட்டமிட்டு கூற முடியாது. ஏன் ரஜினிக்கேகூட தனது அடுத்த நடவடிக்கை குறித்து தீர்மானமாக சொல்ல முடியுமா என்பது சந்தேகம்தான். அதுவும் அரசியல் பற்றி சொல்லவே வேண்டாம். வந்தாலும் வருவேன், சரியான நேரத்துல வருவேன், வராட்டாலும் வரமாட்டேன் என்று அவர் அளவுக்கு அரசியலையும் சமூகத்தையும் குழப்பியவர்கள் கிடையாது.
நீங்க அரசியலுக்கு வருவீங்களா என்று ரஜினியுடம் கேட்டதற்கே இன்னும் பதிலில்லை. இந்நிலையில், ரஜினியை வைத்து அதிக படங்கள் இயக்கியவர் என்பதால், எஸ்.பி.முத்துராமனிடம் அந்த கேள்வியை கேட்டனர். ரஜினி அரசியலுக்கு வருவாரா?
ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அந்த கடவுளுக்குதான் தெரியும் என்று மேலே கைகாட்டி எஸ்ஸானார் எஸ்.பி.எம்.
நம்மகிட்ட அந்த கேள்வியை கேட்டிடுவாங்களோ என்று அந்த கடவுளே எங்காவது நடுங்கிக் கொண்டிருக்கலாம். அப்பேர்ப்பட்ட கேள்வியல்லவா அது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment