டெல்லி கணேஷின் காசு மீது கமல் காட்டிய கரிசனம்
டெல்லி கணேஷ் தயாரித்திருக்கும் என்னுள் ஆயிரம் படத்தின் பாடல்களை கமல் வெளியிட்டார். இந்த நிகழ்வு கமலின் வீட்டில் எளிமையாக நடந்தது.
இந்த விழா குறித்து பேசிய டெல்லி கணேஷ், நானாக இதுவரை கமலிடம் எதுவும் கேட்டதில்லை. என் மகன் மகா நடிப்பில் நான் தயாரித்திருக்கும் என்னுள் ஆயிரம் படம் குறித்து அவரேதான் கேட்டார். ஆடியோ விழாவுக்கு அழைத்தபோது, உடனே ஒப்புக் கொண்டவர், என்னுடைய வீட்டிலேயே அதனை வைத்துக் கொள்ளலாம் என்றார்.
ஆடிட்டோரியத்தில் விழாவை நடத்தி என்னுடைய காசு வீணாவதை கமல் விரும்பவில்லை. அவரது ஆதரவு எங்களுக்கெல்லாம் நம்பிக்கையை தந்திருக்கிறது என்றார்.
டெல்லி கணேஷின் காசு மீது கமல் காட்டிய கரிசனத்தில் கொஞ்சத்தை உத்தம வில்லனின் போதும் காட்டியிருக்கலாம். திருப்பதி பிரதர்ஸ் பிழைத்திருப்பார்கள்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment