தெறி கான்ட்ரவர்ஸி

Share this :
No comments


தெறி படம் ஏப்ரல் 14 வெளியாகிறது. படம் குறித்த அனைத்து தகவல்களும் ஏறக்குறைய வெளியாகிவிட்ட நிலையில், இன்னும் வதந்தி கிளப்புகிறவர்களுக்கு வற்றாத சுனையாகத்தான் இருக்கிறது தெறி.

என்ன விஷயம்...?

தெறி படம் முடிந்து சென்சாருக்கு திரையிட்டு காட்டியதாகவும், எந்த சேதாரமும் செய்யாமல் சென்சார் யு சான்றிதழ் தந்ததாகவும் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். அப்படியானால், தெறியில் ஏதாவது காட்சியை சென்சார் எடிட் செய்யச் சொன்னதா? இல்லை தெறிக்கு யு சான்றிதழ் கிடைக்கவில்லையா?

அதெல்லாம் கிடையாது. முதலில் படமே இன்னும் சென்சாருக்கு போகவில்லை. சென்சாருக்கே போகாத படத்துக்கு எப்படி சான்றிதழ் கிடைக்கும்...?

விட்டால் தெறி வெளியாகி முதல் மூன்று நாளில் 70 கோடிகள் வசூலித்தது என்பார்கள். எதற்கும் உஷாராயிருங்க.

No comments :

Post a Comment