மணிரத்னம் படத்திலிருந்து சாய் பல்லவி நீக்கம்

Share this :
No comments


மணிரத்னம் படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட சாய் பல்லவி திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட வேடத்துக்கு சாய் பல்லவியைவிட வயதான மெச்சூரிட்டி உள்ள நடிகை தேவைப்படுவதால் அவர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடல் படத்துக்குப் பிறகு மணிரத்னம் யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்பதில் ஆரம்பம் முதலே குளறுபடி தொடர்கிறது. மகேஷ்பாபு, நாகார்ஜுன், ஐஸ்வர்யா ராய் மூவரும் மணிரத்னத்தின் புதுப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

பிறகு கார்த்தி, துல்கர் சல்மான், நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ் என நடிகர்கள் மாறினர். அதன் பின் துல்கருக்குப் பதில் நானி என்றனர். கீர்த்தி சுரேஷும் படத்திலிருந்து விலகினார். கடைசியில் கார்த்தி, சாய் பல்லவி என முடிவானது. இந்நிலையில்தான் நாயகி கதாபாத்திரம் மெச்சூரிட்டியுடன் இருக்க வேண்டும் என்று சாய் பல்லவியை நீக்கியுள்ளனர்.

மணிரத்னம் படத்தை தொடங்கும் முன் இன்னும் பலமுறை நடிகர்கள் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.

No comments :

Post a Comment