ராமராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பார்வையாளர்; திகைத்த அதிமுகவினர்

Share this :
No comments


நடிகர் ராமராஜன் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பாரவையாளர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா, பொறையாரில் ஞாயிறன்று இரவு அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரச்சாரம் செய்தார். அவர் பிரச்சாரம் செய்தபோது, பொறையாரில் தெருவிளக்குகள் எரியாமல் இருண்டு கிடந்ததால் இருட்டிலேயே பிரச்சாரம் செய்தார். தமிழ்நாடு மிகைமின் மாநிலமாகிவிட்டது என்று முதல்வர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக அரசின் திட்டங்களை அளந்து பேசிய ராமராஜன் 1-ரூபாய்க்கு இட்லி கொடுப்பதாக அதிமுக அரசை புகழ்ந்து பேசியபோது வேடிக்கை பார்த்த ஒரு நபர் பொறையாரில் 4-ரூபாய்க்கு இட்லி விற்கிறார்கள். நீ என்ன பேசுகிறாய் என ராமராஜனிடம் கேள்வி கேட்டார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த ராமராஜனுக்கும், அந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொலைக்காட்சி நிருபர்கள் வாக்குவாதத்தை படம் பிடித்ததால் அதிமுக தொண்டர்கள் அந்த நபரை ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்து நின்றனர்.

No comments :

Post a Comment