தற்கொலை செய்து கொண்ட டிவி நடிகை பிரதியுஷா கர்ப்பமாக இருந்தார்: உறுதி செய்தார் மருத்துவர்
சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட மண்வாசனை டிவி தொடாரின் நடிகை பிரதியுஷா கர்ப்பமாக இருந்தார் எனவும், அவர் தற்கொலை செய்துகொண்டதற்கு சில நாட்கள் முன்பு கருகலைப்பு செய்திருக்ககூடும் எனவும் மருத்துவர்கள் கூறினர்.
24 வயதான பிரபல டிவி நடிகை பிரதியுஷா மும்பையை சேர்ந்தவர். இவர் மண்வாசனை என்ற தொடரில் நடித்து வந்தார், இது இந்தியில் இருந்து மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பப்படும் தொடர். இவர் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காதல் தோல்வியால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனால் அவரது காதலன் ராகுல்சிங் மீது தற்கொலைக்கு தூண்டியதாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ராகுல்சிங் டிவி தொடர் தயாரிப்பாளர் ஆவார்.
இந்நிலையில் பிரதியுஷா கர்ப்பமாக இருந்தார் எனவும், தற்கொலை செய்வதற்கு சில நாட்கள் முன்பு அவர் கருக்கலைப்பு செய்ததற்கான அறிகுறிகள் உள்ளதாக ஜேஜே மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அவருடைய கர்ப்பபையில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்களில் அவர் கர்ப்பமாக இருந்ததற்கான ஆதாரம் உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
டிவி நடிகை பிரதியுஷா கர்ப்பமாக இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment