வைகோ சொன்னது என்ன ஆனது? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

Share this :
No comments


மக்கள் நலக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம். சட்டமன்றத் தேர்தல் முடிந்து உறுப்பினர்கள் தான் முதல் அமைச்சரை தேர்வு செய்வார்கள் என்று வைகோ கூறியது என்னானது என்று பாமக இளைஞரணி தலைவர் அண்புமனி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், “தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஒரு சந்தர்பதவாத கூட்டணி. விஜயகாந்த் கடந்த 3 மாதமாக அதிமுக, பாமகவைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திமுக, காங்கிரஸ், வைகோ, கம்யூனிஸட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த வாரம் ஒரு முடிவை அறிவித்தார். இன்று ஒரு முடிவை அறிவித்திருக்கிறார். இந்த முடிவை கடந்த 2 அல்லது 3 மாதத்திற்கு முன்பே அறிவித்திருக்கலாம்.

மக்கள் நலக் கூட்டணியில் முதல் அமைச்சர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம். அது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. சட்டமன்றத் தேர்தல் முடிந்து உறுப்பினர்கள் தான் முதல் அமைச்சரை தேர்வு செய்வார்கள் என்று வைகோ கூறினார்.

இன்று அதையெல்லாம் கடந்து விஜயகாந்த் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். அடுத்து ஒரு தலித் சமுதாய முதல் அமைச்சர் வேட்பாளரை ஏற்றுக்கொள்ளாத மக்கள் நலக் கூட்டணி, இன்று விஜயகாந்த் அவர்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை அவர்கள் சொல்ல வேண்டும். இந்த அரசியல் சூழல் எங்களுக்கு ஒரு சாதகமான சூழல். பாமகவின் வெற்றிக்கு வழி பிறந்திருக்கிறது. திமுக, அதிமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். அதற்கு மாற்று யார் என்று மக்களுக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment