மீண்டும் போயஸ் கார்டன் சென்றார் சரத்குமார்: அம்மாவிடம் சரண்
முன்னனர் சமத்துவ மகக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. பின்னர் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது.
இதைத் தொடர்ந்த பாஜகவில் இணையப் போவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியிருந்தார்.
இதனால், அவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை சந்திப்பதற்காக போயஸ் கார்டன் சென்றார்.
சரத்குமாரின் இந்த போயஸ் கார்டன் விஜயம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,சமக அதிமுக கூட்டணியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், எத்தனை தொகுதிகளில் போட்டியிடப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் மக்கள் நல கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் அந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment