நீங்கள் த்ரில் விரும்பியா? - இந்தப் படத்தைப் பாருங்க

Share this :
No comments


இரண்டு வாரங்கள் முன்பு யுஎஸ்ஸில் 10 குளோவர்பீல்ட் லேன் என்ற திரைப்படம் வெளியானது. டேன் ட்ராச்டென்பெர்க் இயக்கிய இப்படத்தை விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

ஜான் குட்மேன் நடித்துள்ள இப்படத்தை பிரபல இயக்குனர் ஜே.ஜே.ஆப்ரம்ஸ் தயாரித்துள்ளார். இயக்குனர் டேன் ட்ராச்டென்பெர்க் இதற்குமுன் குறும்படம் எடுத்த அனுபவம் உள்ளவர். அவரது முதல் முழுநீள திரைப்படம் இது.

இளம் பெண் ஒருத்தி கார் விபத்துக்குப் பின் கண்விழிக்கையில், பூமிக்கடியில் இருப்பது தெரிய வருகிறது. அவளை காப்பாற்றிய நபர், வெளியே மொத்த பூமியும் அழிந்துவிட்டது. வெளியே சென்றால் நாமும் விஷவாயு தாக்குதலுக்கு ஆளோவோம் என்கிறார்.

அவர் சொல்வது உண்மையா? வெளியே பூமியில் என்னத்தான் நடந்துள்ளது? இல்லை அந்த நபர் பொய் சொல்கிறாரா? அவர் சைக்கோவாக இருப்பாரா?

பரபரப்பான இந்த கேள்விகளுக்கு படம் பதிலளிக்கிறது.

வெறும் 15 மில்லியன் டாலர்களில் தயாரான இப்படம், முதல் மூன்று தினங்களில் சுமாராக 25 மில்லியன் டாலர்களை வசூலித்தது. முதல் பத்து தினங்களில் சுமார் 46 மில்லியன் டாலர்கள்.

இந்த வருடம் இதுவரை வெளிவந்த ஹாலிவுட் க்ரைம் த்ரில்லர்களில் இப்படம் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

No comments :

Post a Comment