தமிழகத்தில் அமாவாசை இருள் சூழப்போகிறது : விஜயகாந்த் கூட்டணி குறித்து தமிழருவி மணியன் கருத்து
விஜயகாந்தை தங்கள் கூட்டணியில் இணைத்ததன் மூலம், வைகோவின் வீழ்ச்சி தன் கண் முன்னால் தெரிவதாகவும், தமிழகத்தை அமாவாசை இருள் சூழ இருப்பதாகவும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் “விஜயகாந்தை எப்படியாவது தன் பக்கம் இழுத்து ஆட்சி அமைக்கலாம் என்று நினைத்திருந்த கருணாநிதியின் கனவு கலைந்து விட்டது. அதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், மக்கள் நலக் கூட்டணி, இனிமேல் மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் கூட்டணி என்று பேச முடியது. பேசவும் கூடாது.
ஏனெனில், எந்த வகையிலும், அதிமுக, திமுக இருவரிடமும் இருந்து ஒரு மாற்று அரசியலை தேமுதிகவிடம் நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. அதிமுகவில் உள்ள துதிபாடும் அரசியல், திமுகவில் உள்ள குடும்ப அரசியல் ஆகிய இரண்டும் தேமுதிகவில் உள்ளது. இன்று பவுர்ணமி. நாளை அமாவாசை. தமிழகத்தை இருள் சூழப்போகிறது என்பதற்கான அறிகுறிதான் இந்த கூட்டணி.
விஜயகாந்தை தன் பக்கம் இழுத்து, தன்னுடைய அரசியல் வீழ்ச்சியை தேடிக்கொண்டுள்ளார் வைகோ. அவரின் வீழ்ச்சி என் கண் முன்னால் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment