தோப்பு வெங்கடாசலம் தீ மிதித்ததன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற தீமிதித் திருவிழாவில், அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
அதிமுகவில் தற்போது கட்சி களையெடுப்புகள் நடைபெற்று வருகிறது. மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரது பதவிகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. பழைய ஐவர் அணியினர்கூட ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் இருவரும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகவும், பின்பு முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
மேலும், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் பலருக்கும் சீட் கிடைக்காது என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழாவையொட்டி செவ்வாயன்று அதிகாலை தீ மிதிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் வேண்டுதல்களை நிறைவேற்ற தீ மிதித்தனர்.
தேர்தலில் போட்டியிட மீண்டும் சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தீ மிதித்ததாக அதிமுகவினர் தெரிவித்தனர்.
ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது விடுதலை பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டதாகவும், மீண்டும் அவர் முதல்வர் பதவி ஏற்றால் தீ மிதிப்பதாக வேண்டிக் கொண்டதாகவும், அதனால் தனது நேர்த்திக்கடனை தீர்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பெருந்துறை சட்டசபை தொகுதியில் இருந்து தேர்வான தோப்பு என்.டி. வெங்கடாசலம் சுற்றுச் சூழல் அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment