விஜயகாந்தின் முடிவால் அதிமுக, திமுக கட்சிகளுக்கே லாபம் : பொன். ராதாகிருஷ்ணன் கருத்து
தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியுடன் இனைந்ததால் தமிழ் நாட்டுக்கு எந்த பலனும் ஏற்படபோவதில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் யார் பக்கம் செல்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இன்று காலை மக்கல்நலக் கூட்டணியில் இணைந்தது தேமுதிக. விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவிர்கு 124 இடமும், மக்கள் நலக்கூட்டணிக்கு 110 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் “இத்தனை ஆண்டுகள் திமுக மற்றும் அதிமுக கட்சிகளே மாறி மாறி ஆண்டு வருவதால், மக்கள் மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், அதிமுக, திமுகவிற்கு மாற்றாக ஒரு புதிய கூட்டணியை அமைக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் விஜயகாந்த மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துள்ளார்.
இந்த கூட்டணியில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இதன் மூலம், திமுக, அதிமுக கட்சிகளுக்குத்தான் லாபமே தவிர, தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை” என்று அவர் கருத்து தெரிவித்தார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment