வெளியான அக்‌ஷய்குமார் புகைப்படம் : அதிர்ச்சியில் படக்குழுவினர்

Share this :
No comments


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கிக் கொண்டிருக்கும் 2.ஓ படத்தின் வில்லனான நடித்து வரும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாரின் புகைப்படம் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவரவுள்ள 2.ஓ படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு விளையாட்டு மைதானத்தில் ஒரு சண்டை காட்சி எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

இதுவரை அந்தப்படத்தில் நடிக்கும் ரஜினி, அக்‌ஷய் குமார் ஆகியோரின் தோற்றம் வெளியிடப்படவில்லை. ஏனெனில், படப்பிடிப்பு தளத்தில் செல்போன் மற்றும் கேமரா ஆகியவை பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அக்‌ஷய்குமாரின் கெட்டப் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி, யார் அந்த புகைப்படத்தை வெளியிட்டார்கள் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment