தலயும் வேண்டாம் தளபதியும் வேண்டாம் விஷால் போதும் - குஷ்பு கலாட்டா பதில்

Share this :
No comments


மனதில் பட்டதை பட்டென்று சொல்கிறவர், குஷ்பு. அது தல பற்றிய கேள்வியாக இருந்தாலும், காங்கிரஸ் தலைவியை பற்றிய கேள்வியாக இருந்தாலும். நேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் தடாலடி பதில்கள் அளித்தார் குஷ்பு.
ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், அவர்தான் எப்போதும் சூப்பர் ஸ்டார். அவரது இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்றார். நடிகர் சங்க தேர்தலில் ஆதரவு சரத்குமாருக்கா இல்லை விஷாலுக்கா என இன்னொரு கேள்வி.

எப்போதும் உண்மையையும், சரியானதையும் ஆதரிப்பேன் என இதற்கு மட்டும் கொஞ்சம் நழுவுற பதிலை குஷ்பு தெரிவித்திருந்தார்.

தல, தளபதி இருவரில் வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு, இருவரும் இல்லை, எனக்குப் பிடித்த விஷாலுடன் நடிப்பேன் என்று பதிலளித்துள்ளார்.

தல தளபதி மீது குஷ்புவுக்கு என்ன கோபமோ.

No comments :

Post a Comment