தற்கொலை செய்து கொள்பவர்கள் பட்டியலில் தமிழகம் 2வது இடம்
நாடு முழுவதும் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட தற்கொலைகள் குறித்த புள்ளி விவரங்களில் படி இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இந்தியா முழுவதிலும் கடந்த ஆண்டு 1.31 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இது ஒவ்வொரு மணி நேரத்திற்கு 15 பேர் என்ற அளவில் இருப்பதாகவும் இந்த புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 16 ஆயிரத்து 122 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக எண்ணிக்கையில் தற்கொலைகள் நடக்கின்றன. மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 16 ஆயிரத்து 307 பேர் தற்கொலை செய்துள்ளதாக புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.
4 பெருநகரங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, சென்னையில்தான் அதிகப்பட்சமாக 2 ஆயிரத்து 214 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பெங்களூரு, புதுடெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.
அதே சம்யம், கடந்த 3 ஆண்டுகளின் ஆவணங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் 2012ஆம் ஆண்டு 14 விழுக்காடாக இருந்த தற்கொலை சம்பவங்கள், 2013இல் 12.3 விழுக்காடாகவும், 2014இல் 12.2 விழுக்காடாகவும் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment