ரஜினிதான் என்னுடைய காட் ஃபாதர் - சொல்வது யார் தெரியுமா?

Share this :
No comments


இசையமைப்பாளர் அனிருத் நடிகர் ரஜினிகாந்தின் உறவினர் என்பது தெரியும். அனிருத் சர்ச்சையில் சிக்கிய போது, அவரை அழைத்து அறிவுரை சொல்லும் அளவுக்கு ரஜினிக்கு அனிருத் மீது கரிசனம் உண்டு.

ரஜினியே எனது காட் ஃபாதர் என அனிருத் கூறினார். 3 படத்தின் மூலம் இசையமைப்பாளரான அனிருத் நான்கு வருடங்களில் 10 -வது படத்தை தொட்டிருக்கிறார். சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம், அனிருத்தின் பத்தாவது படம்.

அனிருத் ரஜினியின் ஆல் டைம் ரசிகர். அவரைப் பற்றி கேட்டால் அனிருத்துக்கு பேச ஆயிரம் இருக்கிறது.

"அவர் எனது உறவினர். என் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். என்னுடைய ஒவ்வொரு இசை ஆல்பத்தையும் கேட்டு கருத்து சொல்வார். எனது வளர்ச்சிக்கு அவை பயன்படுகின்றன. ரஜினிதான் எனது காட்பாதர். அவர் எனக்கு அளிக்கும் ஊக்கத்தால்தான் முன்னேறுகிறேன்" என்றார்.

கொசுறு செய்தி... ஆல்டைம் தலைவர் ரஜினி என்றாலும் அஜித்தின் பரம ரசிகர் அனிருத். அஜித் படம் வெளியானால் முதல் நாள் முதல் ஷோ ரசிகர்களுடன் பார்ப்பது அனிருத்தின் வழக்கம்.

No comments :

Post a Comment