சிகரெட், மது இல்லைன்னா கிரியேட்டிவிட்டி கெட்டுப் போய்டும் - சொல்வது ஆர்யா
கதையிருக்கிறதோ இல்லையோ. காட்சிக்கு காட்சி புகைபிடிக்கிற, மது அருந்துகிற காட்சிகள் ராஜேஷின் படத்தில் நிறைந்திருக்கும். மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன் என்பதை தமிழக மதுப்பிரியர்களின் மந்திரச் சொல்லாக்கியவர்.
இவரது புதிய படம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க விரைவில் வெளியாகிறது. படத்தின் டீஸரே, பீர் குடிப்பதைப் பற்றியதுதான். இந்தப் படத்தில் நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார், ஆர்யா.
படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், சேலம் சென்ற ஆர்யா அங்குள்ள திரையரங்கில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் முன்னிலையில் மீண்டும் வெளியிட்டார். அப்போதுதான் அந்த அரிய கருத்தை வெளியிட்டார் ஆர்யா.
"புகைபிடிக்கிற, மது அருந்துகிற காட்சியை சினிமாவில் பார்த்து அதுபோல் செய்கிறார்கள் என்பது தவறு. படத்தில் கொலை செய்கிற காட்சிகள் வருகிறது. அதற்காக யாரும் கொலை செய்வதில்லை. சிகரெட் பிடிக்கிற, மது அருந்துகிற காட்சி இல்லாமல் படமெடுத்தால் கலைஞர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படும்" என்றார்.
காமெடியனும், ஹீரோவும் பேசிகிட்டேயிருக்கிற படத்துல என்ன கிரியேட்டிவிட்டி? நல்லா பேசுறாங்கப்பா நியாயம்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment