படமாகும் சுனந்தா புஷ்கர் மரணம் - குஷ்புவிடம் கதையை சொல்ல மறுத்த இயக்குனர்

Share this :
No comments


ஒரு மெல்லிய கோடு என்ற படத்தை இயக்குனர் ரமேஷ் எடுத்து வருகிறார். குப்பி ரமேஷ் என்றால் சட்டென்று தெரியும். ராஜீவ் கொலையை குப்பி என்ற பெயரிலும், சந்தனக்கடத்தல் வீரப்பன் கதையை வனயுத்தம் என்ற பெயரிலும் எடுத்தவர்.

ஒரு மெல்லிய கோடு, சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணத்தை பின்னணியாக வைத்து தயாராகிறது.

இதுபற்றி கூறிய ரமேஷ், ஒருவரின் மனைவி விஷம் வைத்து கொல்லப்படுகிறார். அது என்ன மாதிரியான விஷம், எப்படி கொல்லப்பட்டார் என்பதை வைத்து, ஒரு மெல்லிய கோடு படத்தை எடுத்து வருகிறேன் என்றார். இந்தப் படத்தில் ஷாம் சசிதரூரின் கதாபாத்திரத்திலும், சுனந்தா புஷ்கர் வேடத்தில் மனிஷா கொய்ராலாவும், வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுனும் நடிக்கின்றனர்.

காங்கிரஸ் பிரமுகர் சசி தரூர் சம்பந்தப்பட்ட கதை என்பதால், காங்கிரஸின் மக்கள் தொடர்பாளராக இருக்கும் குஷ்பு ரமேஷை தொடர்பு கொண்டு படத்தின் கதை குறித்து கேட்டுள்ளார். கதையைச் சொல்ல ரமேஷ் மறுத்துள்ளார்.

ராஜீவ் கொலை, வீரப்பன் கதை என பல படங்களை எடுத்திருக்கிறேன். அவை யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. அதேபோல், ஒரு மெல்லிய கோடு படமும் யார் மனதையும் புண்படுத்தாது என்றார் ரமேஷ்.

No comments :

Post a Comment