’நான் சுத்தமான தெய்வ பக்தி உடையவள்’ - சர்ச்சை பெண் சாமியார் ராதே மா
தான் சுத்தமான தெய்வபக்தி உடையவள் என்றும் தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் சர்ச்சை பெண் சாமியார் ராதே மா கூறியுள்ளார்.
மும்பையில் ஆசிரமம் நடத்தி வரும் பிரபல பெண் சாமியார் ராதே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். மேலும், அவர் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட எண்ணற்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, ஆபாசமான முறையில் பாலிவுட் திரைப்பட இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.
இந்நிலையில், இது குறித்து நிருபர்களிடத்தில் பேசிய ராதே மா, ”என் மீதான் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. எனது கடவுளைத் தவிர, எவற்றையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. எனது கடவுளின் கண்களுக்கு நான் சரியானவள். யாரும் இந்த உலகத்திற்கு மாற்றாக முடியாது”
மேலும் அவர் கூறுகையில், “நான் ஆபாசமான முறையில் எதையும் செய்யவில்லை. நான் ஒரு தாய். ஒரு தாய் தனது குழந்தைகளை விரும்புவது இழிசெயலாகாது. நான் சுத்தமான தெய்வ பக்தி உடையவள்” என்றார்.
பக்தர்களை ஏன் நெருக்கமாக கட்டிப்பிடிக்கிறீர்கள் என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், ‘நான் எனது பக்தர்களை கட்டிப்பிடிப்பதில் எந்த தவறும் இல்லை. என் மீது அவர்கள் செலுத்தும் அன்பிற்கு பதிலாக, கட்டிப்பிடித்து திருப்பி தருகிறேன்’’ என்றார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment