மூளையை உபயோகியுங்கள் - சிம்பு ரசிகர்களிடம் உதயநிதி காட்டம்
உங்கள் மூளையை உபயோகித்த பிறகு கருத்துகளை தெரிவியுங்கள் என்று, சிம்பு ரசிகர்களை காட்டமாக விமர்சித்துள்ளார், உதயநிதி.
சிம்பு நடித்துள்ள வாலு தொடர் பிரச்சனைகளில் சிக்கி வழக்குகளை சந்தித்தது அனைவரும் அறிந்ததே. மேஜிக் ரேய்ஸ் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கே வாலு வெளியாக தடையாக இருந்தது.
நடிகர் விஜய் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு வாலு படம் வெளிவர முயற்சி செய்தார். நீதிமன்றமும் வாலுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் தள்ளுபடியானது. ஆகஸ்ட் 14 சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், "இன்னும் சிலர் வாலு படத்தை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் உங்களால் படத்தை தடுக்க முடியாது. என்னை விரும்பும் ரசிகர்கள் என்னிடம் இருக்கிறார்கள். ஆண்டவன் அவர்களுக்கு பதில் சொல்வான்" என சிம்பு கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, வாலு படத்தை உதயநிதி தடுப்பதாக சிம்பு ரசிகர்கள் ட்விட்டரில் செய்தி பகிர்ந்து வருகின்றனர். இதற்கு உதயநிதி கடுமையான மறுப்பை பதிவு செய்துள்ளார்.
"வாலு படத்தை நான் ஏன் தடுக்கனும். ஏதாவது லாஜிக் இருக்கா? உங்கள் கருத்துகளை தெரிவிக்கும் முன் யோசியுங்கள். நான் எந்த நடிகருக்கும் நடிகரின் ரசிகர்களுக்கும் எதிரி இல்லை. உங்கள் மூளையை உபயோகித்த பின்னர் கருத்துக்களை தெரிவியுங்கள்" என உதயநிதி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment