பாபி சிம்ஹா நடிக்கும் படத்துக்கு ரஜினி படத்தின் பெயர்

Share this :
No comments


பாபி சிம்ஹா படத்துக்கு ரஜினி நடித்த படத்தின் பெயரை வைத்துள்ளனர்.புதிய படங்களுக்கு பழைய படங்களின் பெயர் வைப்பது அதிகரித்து வருகிறது. அதுவும், ரஜினி நடித்தப் படங்களின் பெயர் என்றால் கொஞ்சம் ஸ்பெஷல். ரஜினி நடித்த பாயும் புலி படத்தின் பெயர்தான் விஷால் நடித்திருக்கும் படத்தின் பெயரும். பாபி சிம்ஹா புதிதாக ஒப்பந்தமாகியிருக்கும் படத்துக்கும் பழைய ரஜினி படத்தின் பெயரையே வைத்திருக்கிறார்கள்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, மீனா, ரேஜா நடிப்பில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த திரைப்படம், வீரா. இந்தப் பெயரைதான் பாபி சிம்ஹாவின் புதிய படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.

பாபி சிம்ஹா நடிக்கும் கவலை வேண்டாம், கோ 2 படங்களை தயாரித்துவரும் எல்ரெட் குமாரின், ஆர்எஸ் இன்போடெக் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

No comments :

Post a Comment