நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு

Share this :
No comments


நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை, மீண்டும் தாக்கல் செய்வது குறித்து அரசியல் கட்சிகளுடன் மீண்டும் ஆலோசனை தொடங்கப்படவில்லை என்று மத்திய சட்ட அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பதிலளித்த அவர், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது என்று கூறினார்.

இது தொடர்பான சட்டத் திருத்த மசோதா கொண்டு வருவதற்கு முன்பாக, அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், பரிசீலிக்க வேண்டும் என்று சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment