இந்தியாவை பழிவாங்க போவதாக, யாகூப் மேமன் சகோதரர் டைகர் மேமன் மிரட்டல்

Share this :
No comments


யாகூப் மேமனை தூக்கிலிட்டதற்கு, இந்தியாவை பழிவாங்க போவதாக, அவரது சகோதரர் டைகர் மேமன் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் கடந்த 31 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

அதற்கு முந்தைய நாள், மும்பையில் உள்ள தனது தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டைகர் மேமன், யாகூப்பை தூக்கிலிடும் இந்தியாவை பழிவாங்கியே தீருவேன் என கூறியதாக, பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வன்முறையை கைவிடுமாறு டைகர் மேமனை, அவரது தாயார் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அதை, டைகர் மேமன் நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூப் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி டைகர் மேமன் ஆவார்.

No comments :

Post a Comment