ரிக்ஷா தொழிலாளியின் நேர்மையை பாராட்டிய போலீசார்

Share this :
No comments


சாலையோரம் கிடந்த ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை ரிக்ஷா தொழிலாளி ஒருவர் நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரைச் சேர்ந்த ஆபித் குரேஷி என்கிற ரிக்ஷா தொழிலாளி மிகவும் ஏழ்மையான சூழலில் தனது குடும்பத்தை நடத்தி வருபவர். அவர் ரிக்ஷா ஓட்டிக்கொண்டு செல்லும்போது சாலையோரம் கிடந்த பண்டலை பிரித்து பார்த்தபோது அதில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் இருந்தது.

வறுமை வாட்டியபோதும் அந்த பணத்தை தன் தேவைக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் நேர்மையாக அதனை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

குரேஷியின் நேர்மையை கண்டு வியந்து அவரை போலீசார் வெகுவாகப் பாராட்டினர்.
இப்போது iTunes இல் வெப்துனியா தமிழ் மொபைல் செயலியைப் பதிவிறக்க கிளிக் செய்யவும். ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பதிவிறக்க கிளிக் செய்யவும். கட்டுரைகளைப் படித்து, எங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்திடுங்கள், ட்விட்டரில் எங்களைப் பின்பற்றுங்கள்.

No comments :

Post a Comment