அஜீத்தா விஜய்யா? அசத்தலாக பதிலளித்த சிம்பு

Share this :
No comments


சிம்பு அஜீத்தின் தீவிர ரசிகர் என்பது உலகறிந்த ரகசியம். தனது படத்தில் தல புகழ்பாடும் ஒருவரியாவது வைக்காவிடில் தலை வெடித்துவிடும் அவருக்கு. அந்தளவுக்கு வெறியர்.

அதேநேரம், விஜய்யும் சிம்புக்கு நட்புதான். வாலு படம் பிரச்சனையிலிருந்து மீண்டுவர விஜய் உதவி செய்தார். பதிலுக்கு புலி பாடல்கள் வெளியீட்டு விழாவில், விஜய்தான் உண்மைத் தமிழன் என பாராட்டு மழை பொழிந்தார், டி.ஆர். ட்விட்டரில் சிம்புவும், என் உடன்பிறவா அண்ணன் என்று கசிந்துருகினார்.

இந்த சென்டிமெண்டை பயன்படுத்தி, சிம்பு இனி அஜீத்தைவிட்டு, விஜய் ரசிகராக மாறிவிடுவார் என இணையத்தில் சிலர் டமாரமடித்தனர். சத்தம் சிம்புக்கு கேட்காமலா இருக்கும்?

நான் எப்போதும் அஜீத் ரசிகர்தான். அதேபோல் விஜய் என் அன்பான அண்ணன் என்று டமாரமடித்தவர்களுக்கு பதிலளித்துள்ளார்.

அசத்தலான பதில்.

No comments :

Post a Comment