பத்தாவதில் பாசாக துடிக்கும் அனிருத்
கொலவெறி பாடலுடன் அறிமுகமான அனிருத் குறுகிய காலத்தில் ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்குமளவுக்கு உயர்ந்துள்ளார். விஜய் படத்துக்கு இசையமைத்தவர் தற்போது அஜீத் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
அஜீத் படம் குறித்து சமீபத்தில் குறிப்பிட்டவர், நானே அஜீத் ரசிகன். அவர் படத்தில் இசை எப்படி இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றார்.
முக்கியமான விஷயம், அனிருத்தின் பத்தாவது படம் இது. அதனால், இதுவரை இல்லாத அளவுக்கு பாடல்களுக்கு மெனக்கெட்டிருக்கிறார். அனைத்துப் பாடல்களையும் ஹிட்டாக்கி, தனது பத்தாவது படத்தை வெற்றிப் படமாக்க முயன்று வருகிறார்.
முயற்சி திருவினையாக்கட்டும்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment