மேகி நூடுல்ஸ் தடை நீக்கப்படும் என்று கூறவில்லை: ராம்விலாஸ் பஸ்வான் மறுப்பு
மேகி நூடுல்ஸ் மீதான தடை நீக்கப்படும் என தான் குறிப்பிட்டதாக வெளியான தகவலை மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறுத்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக காரீயம் கலந்திருப்பதாக கடந்த ஜூன் மாதம் மேகி நூடுசிற்கு பல்வேறு மாநில அரசுகள் தடைவிதித்தன. விற்பனைக்கு அனுப்பப்பட்ட மேகி நூடுசை திரும்பப் பெற இந்திய உணவுக் கட்டுப்பாட்டு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டது.
மேகி நூடுல்சிற்கு ஆதரவாக மைசூரு, கோவா ஆய்வகங்களில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் தவறானது என இந்திய உணவு கட்டுப்பாட்டு தர நிர்ணய ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வரும் என மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாக தகவல் எழுந்தது.
அதனை மறுத்துள்ள ராம்விலாஸ் பஸ்வான் மக்களின் சுகதார விஷயத்தில் மத்திய அரசு எந்த ஒரு சமரசம் செய்துகொள்ளாது என்றும் உணவு தரம் விஷயத்தில் உணவுக்கட்டுப்பாட்டு தர நிர்ணய ஆணையத்தின் முடிவே இறுதியானது என்றும் கூறினார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment