கல்யாண் ஜுவல்லர்ஸின் புதிய அம்பாசிடர் சோனம் கபூர்

Share this :
No comments

ஒரு சதவீத கலால் வாரிக்காக கடையை மூடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள், நகை வியாபாரிகள். இவர்கள் சினிமா நட்சத்திரங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் கோடிகளை குறைத்துக் கொண்டால், ஒரு சவரன் நகையை மார்க்கெட் விலையைவிட ஐயாயிரம் ரூபாய் குறைத்து விற்கலாம். ஏற்கனவே அரை டஜன் முன்னணி நட்சத்திரங்களை வளைத்துப் போட்டிருக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் அடுத்து சோனம் கபூரையும் வளைத்துள்ளது. இவர்தான் கல்யாணின் புதிய அம்பாசிடர். சோனம் கபூர் நடிப்பில் புதிய விளம்பரப் படம் ஒன்றையும் எடுத்துள்ளனர். இனி உங்கள் வரவேற்பறைக்கே சோனம் வந்து கல்யாண் ஜுவல்லர்ஸில் நகை வாங்கும்படி தொந்தரவு செய்வார். இப்படி நம்மை தொந்தரவு செய்வதற்காக சோனத்துக்கு அளிக்கப்பட்டது, அவர் ஒரு படத்துக்கு வாங்கும் கோடிகளைவிட அதிகமாம். வாழுறாங்கப்பா...

No comments :

Post a Comment