விஜய் மல்லையா கடனை அடைக்க பிகினி அழகிகளை வங்கிகளுக்கு கொடுக்கலாம் : ராம்கோபால் வர்மா

வங்கிகளிடம் வாங்கிய கடனை அடைக்க, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, தன்னிடம் இருக்கும் பிகினி அழகிகளை வங்கிகளுக்கு கொடுத்தால் அவருடைய கடன் அடைந்து விடும் என்று பிரபல பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார். ஏராளமான வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று, சர்ச்சையில் சிக்கிய மதுபான ஆலை உரிமையாளர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் உள்ளார். கடன் சர்ச்சை தொடர்பாக விஜய் மல்லையா மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்காட்சிகள் பாராளுமன்றத்தில் பிரச்சனைகளை எழுப்பி வருகின்றனர். விஜய்மல்லையாவிற்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அவரை கைது செய்து ஏப்ரல் 13ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. இதற்கிடையில், விஜய் மல்லையா பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா “விஜய் மல்லையா வங்கிகளிடம் வாங்கிய கடனை அடைக்க, தன்னிடம் உள்ள பிகினி அழகிகளில், அனைத்து வங்கிகளுக்கும் ஒரு அழகியை அனுப்பலாம் என நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். அடுத்த ட்விட்டில் “அவர் கடன் வாங்கியுள்ள பணத்தில் பல பிகினி அழகிகளுக்கு சொத்துகள் சேர்ந்துள்ளார்கள் எனில், அதே அழகிகளை கடனை அடைக்க வங்கிகளுக்கு கொடுப்பதும் முறைதானே?” என்று கேட்டுள்ளார். “அவருக்கு வங்கிகள் கடன் கொடுத்ததற்கு, அவருடைய கம்பெனி வருடம் தோறும் தயாரிக்கும் காலண்டர் அட்டையில் இடம் பெற்ற நடிகைகளான, தீபிகா படுகோனே, நர்கிஸ் ஃபர்கி, ஈஷா குப்தா, கேத்ரினா கைப் ஆகியோர்களும் முக்கிய காரணம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “அவருக்கு வங்கிகள் கடன் அளித்ததற்கு ஏராளமான பிகினி அழகிகளும் முக்கிய பங்கு வகிப்பதால், கடனை அடைக்க, பிகினி அழகிகளை கொடுப்பதை வங்கி அதிகாரிகள் குறை கூற மாட்டார்கள்” என்றும் கிண்டலடித்துள்ளார். எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தும் ராம் கோபால் வர்மாவின் இந்த கருத்தும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment